சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவர்களை" அப்படியே மியூட் பண்ணிடலாம்.. வெளிப்படையாக "உடைத்து" பேசிய இபிஎஸ்.. அதிர்ந்து போன அலைகள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் ஆக போகிறது.. தேர்தல் அறிக்கையையே அதிமுக இன்று வெளியிட போகிறது.. அப்படி இருந்தும் அதிமுகவிற்குள் இன்னும் சிலர் வேட்பாளர் அறிவிப்பிற்கு எதிராக பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

178 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம்.. இனி என்ன பிரச்சாரம்தான் என்று அதிமுக நிம்மதி அடைவதற்கு முன் கட்சிக்குள் சில முக்கிய நிர்வாகிகள் வேட்பளார் அறிவிப்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக வேட்பாளர் அறிவிப்பிற்கு எதிராக சில நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அம்மாபேட்டையில் ஒரே பள்ளியில்... 56 மாணவிகளுக்கு கொரோனா... 2 வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்புஅம்மாபேட்டையில் ஒரே பள்ளியில்... 56 மாணவிகளுக்கு கொரோனா... 2 வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

எங்களுக்கு சீட் கிடைக்கும்னு எதிர்பார்த்தோம்.. ஆனால் புதிய முகங்களுக்கு இடம் கொடுத்து இருக்காங்க என்பதுதான் சில மூத்த நிர்வாகிகளின் புகாராக இருக்கிறது.. என்ன பிரச்சனை அதிமுகவில்?

 வேட்பாளர் அறிவிப்பு

வேட்பாளர் அறிவிப்பு

இதுவரை 177 வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக வெளியிட்டு இருக்கிறது. இதில் பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர்க்களாக இருக்கும் 35 பேருக்கு மீண்டும் தேர்தலில் அதிமுக வாய்ப்பு கொடுத்து உள்ளது. அதிமுக எம்எல்ஏக்களில் 47 பேருக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை.

புதிய முகம்

புதிய முகம்

இதில் மொத்தம் 60 புதிய முகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர் தேர்வு சில நிர்வாகிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. முதலாவதாக சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தனக்கு சீட் வழங்கவில்லை என்று கோபப்பட்டு மொத்தமாக அமமுக பக்கமே சென்றுவிட்டார். இன்னொரு பக்கம் செய்யூர், செங்கல்பட்டு, ஏற்காடு என்று பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன.

போராட்டம்

போராட்டம்

எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.. ஆனால் வெற்றிவாய்ப்பு இல்லாத வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். தேவையில்லாத அரசியல் செய்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். வேட்பாளர்களை மாற்றும் வரை தொடர்ந்து போராட்டம் செய்வோம் என்று சில அதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

போர்க்கொடி

போர்க்கொடி

ஆனால் இதை எல்லாம் முதல்வர் பழனிசாமியோ.. அதிமுகவில் மூத்த அமைச்சர்களோ கண்டுகொள்ளவே இல்லையாம். நாங்கள் எல்லாத்தையும் அலசி ஆராய்ந்துவிட்டதான் முடிவு எடுத்தோம். யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஆராய்ந்து, உளவுத்துறை ரிப்போர்ட்களை பரிசீலனை செய்துதான் ஒரு முடிவிற்கு வந்தோம்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்த எதிர்ப்பு எல்லாம் விரக்தியில் சிலர் செய்யும் எதிர்ப்புகள்.. இதை எல்லாம் பெரிதுபடுத்த கூடாது என்று அதிமுக மேலிடம் நினைக்கிறது. முதல்வரும் இதை நேற்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். எல்லா கட்சியிலும்தான் வேட்பாளர் அறிவிப்பிற்கு எதிராக குரல்கள் எழும்புகிறது. அதிமுகவில் மட்டும் இப்படி குரல்கள் எழும்புவது போல சிலர் பேசுகிறார்கள்.

குரல்கள்

குரல்கள்

இதெல்லாம் சாதாரண விஷயம். வேட்பாளர் பட்டியலை பார்த்ததும் இப்படி சிலர் அதிருப்திக்கு உள்ளாவது இயல்புதான். இதை எல்லாம் சமாளித்து சமாதானம் செய்துவிடுவோம் என்று முதல்வர் வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளார். வேட்பாளர் அறிவிப்பிற்கு எதிராக பொங்கும் நிர்வாகிகளை மொத்தமாக மியூட் செய்யும் விதமாக அவர்களிடம் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களை வைத்து சமாதானம் செய்ய அனுப்பி உள்ளார்.

சமாதானம்

சமாதானம்

இப்போது பிரச்சனை வேண்டாம்.. தேர்தல் பணிகளை கவனியுங்கள் என்று உத்தரவிட்டு இருக்கிறாராம். எதிர்ப்புகளை சமாளிக்க சில அமைச்சர்களையும் அவர் களமிறக்கி உள்ளார் என்கிறார்கள். இதனால்தான் தற்போது பல்வேறு மாவட்டங்களில் எதிர்ப்பு அலைகள் அப்படியே அடங்கி.. தேர்தல் பணிகள் நடக்க தொடங்கி உள்ளன.

அதிரடி

அதிரடி

அதிமுகவில் இதை விட மோசமான எதிர்ப்புகளை சந்தித்தவர் முதல்வர் பழனிச்சாமி. ஆட்சியே கவிழ்ந்துவிடும் என்று கூறிய காலம் எல்லாம் இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் சமாளித்து முதல்வர் பழனிசாமி அதிமுக ஆட்சியை காத்து தேர்தல் வரை கொண்டு வந்துள்ளார்.. இந்த சின்ன எதிர்ப்பையும் அவர் எளிதாக எதிர்கொள்வார் என்று அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள.

English summary
Tamilnadu assembly election 2021: AIADMK handles the rift against candidate selection inside the party very well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X