சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது உக்ரைன்-ரஷ்யா வார் இல்லை..இணைப்புக்கு ஓபிஎஸ் தயாராக இருக்கிறார்.. அழுத்தி சொல்லும் புகழேந்தி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் விசாரணை முடிந்த நிலையில், விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என நம்பிக்கை தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "இது ஒன்னும் உக்ரைன் - ரஷ்யா வார் இல்லை. சேர்ந்தால் தான் எதாவது பண்ண முடியுமே தவிர இல்லையென்றால் தொடர் தோல்விகளால் எதிரிதான் வெற்றி பெற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு.. பவர் இருக்கு.. எடப்பாடி பரபர வாதம்.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!அதிமுக பொதுக்குழு வழக்கு.. பவர் இருக்கு.. எடப்பாடி பரபர வாதம்.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி அமைய போகிறது என அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

"ஓபிஎஸ்-க்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமையும்" தெம்பாக சொல்லும் புகழேந்தி

 உக்ரைன் - ரஷ்யா வார் இல்லை

உக்ரைன் - ரஷ்யா வார் இல்லை

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கே சாதகமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி, அப்படி வந்தால் நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். இது ஒன்னும் உக்ரைன் - ரஷ்யா வார் இல்லை என்று பேசியிருக்கிறார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி இது தொடர்பாக கூறியதாவது:-உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்குதான் சாதகமாக வரும். உச்ச நீதிமன்றம் ஒவ்வொன்றையும் தெளிவாக கேட்டுள்ளது. அதிகாரக துஷ்பிரயோகம் செய்யும் நபராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

இதெல்லாம் என்ன நியாயம்

இதெல்லாம் என்ன நியாயம்

4 வருடங்கள் ஓபிஎஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளார் பொறுப்பில் இருந்து நீக்க முடியாது. உச்ச நீதிமன்றம் இதை புரிந்து கொண்டது. எப்படியாவது பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். கொடநாடு கொலை கொள்ளை போல இன்னும் ஏதாவது நடக்கும் போல இருக்கு.. எப்படியாவது ஆக வேண்டும் என எடப்பாடி நினைக்கிறார். இதற்கு வேலுமணி, தங்கமணி இவர்கள் எல்லாம் சப்போர்ட் ஆக இருக்கிறார்கள். இதெல்லாம் என்ன நியாயம்.

ஓபிஎஸ்க்கு உரிமை உள்ளது

ஓபிஎஸ்க்கு உரிமை உள்ளது

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தால் இவர்கள் கொள்ளை அடித்த பணம் அப்படியே போய் விடும். தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடித்து விட்டு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கின்றனர். அதை சொல்வதற்கு முன்னால் உங்கள் முதுகை திரும்பி பார்க்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பற்றி பேச ஓபிஎஸ்க்கு உரிமை உள்ளது. 13 பேரை குருவி சுடுவது போல தூத்துக்குடியில் சுட்டுக்கொன்று விட்டு.. அதை டிவியில் பார்த்ததாக கூறினீர்களே.. அப்போது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்ததா.. ஒருவரை சொல்லுவதற்கு முதலில் யோக்கியதையும் அருகதையும் வேண்டும்.

துரோகியை நம்பி எந்த கட்சியும் வராது

துரோகியை நம்பி எந்த கட்சியும் வராது

பிரதமரிடம் நன்மதிப்போடு சுமூக உறவோடு பாஜக தலைவர்களின் நம்பிக்கை உரியவராக ஓபிஎஸ் இருக்கிறார். கூட்டணிக்கு வரும் கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை நம்பாது. எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரமாட்டார்கள். ஓபிஸ்சை நம்பி எநத கட்சியும் வருமே தவிர இந்த துரோகியை நம்பி எந்த கட்சியும் வராது. இணைப்புக்கு ஓபிஎஸ் எப்போதும் தயாராக இருக்கிறார். கட்சியை உடைத்துவிட்டனர். கட்சி 2, 3, 4 பிரிவுகளாக தொடர்ந்தால் திமுகவுக்கு தேர்தலே தேவையில்லை.

ஓபிஎஸ்க்கு சாதமாக தீர்ப்பு

ஓபிஎஸ்க்கு சாதமாக தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதமாக வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அப்படி வந்தால் நாங்கள் ஒற்றுமையை விரும்புகிறோம். இது ஒன்னும் உக்ரைன் - ரஷ்யா வார் இல்லை. சேர்ந்தால் தான் எதாவது பண்ண முடியுமே தவிர இல்லையென்றால் தொடர் தோல்விகளால் எதிரிதான் வெற்றி பெற முடியும் என்ற நிலைதான் இன்றைய தினம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
பிரிவினையை மக்கள் விரும்புவதில்லை. ஒற்றுமைக்கு ஓபிஎஸ் தயாராக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அணியினர் தான் தகராறு செய்கின்றனர். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
While the verdict in the AIADMK general committee case will be announced soon, pugazhendi said, "This is not a Ukraine-Russia war. If we join we can do something, otherwise only the enemy can win due to series of defeats... The Supreme Court verdict will also come in favor of OPS."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X