சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இரு மொழிகொள்கைதான்.. நீட் தேர்வு வேண்டாம்.. மத்திய அரசுக்கு எதிராக அதிமுக தீர்மானம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் தொடரும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வதிற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 293 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருந்த நிலையில் சிலருக்கு கொரோனா தொற்றால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் காலை 9.45 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக செயற்குழு: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கும் முயற்சி மீண்டும் தோல்வி

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

அவை பின்வருமாறு:

1. பொது வாழ்வுப் பணிகளுக்கு இலக்கணமாக, கொரோனா நோய்த் தொற்று காலத்திலும் கண்துஞ்சாது கடமையாற்றி மக்களின் துயர்துடைக்க அயராது அரும்பணி ஆற்றி வரும் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டும்!

நிவாரணம்

நிவாரணம்

2. நாட்டிற்கே முன்னோடியாகவும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் கொரோனா நோய் எதிர்ப்புப் பணிகளையும் மருத்துவப் பணிகளையும் மறுவாழ்வுப் பணிகளையும் சட்டம்- ஒழுங்கு நடவடிக்கைகளையும் சிறப்புடன் ஆற்றி வரும் தமிழக அரசுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றியும், பாராட்டும், பத்திரிகை மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும்!

3. கழக அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான பணிகளின் விளைவாக கொரோனா நோய்த் தொற்றிலிருந்தும், பொருளாதார சரிவிலிருந்தும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை ஏற்று மத்திய அரசு கொரோனா நிவாரணத்திற்கும் தடுப்பிற்கும் போதுமானநிதி ஆதாரத்தை தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தல்!

4. தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டியுள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக மானியங்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்!

பொருளாதார வல்லுநர்

பொருளாதார வல்லுநர்

5. தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிந்தைய சூழலில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட பொருளாதார வல்லுநர் ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்ததற்கு தமிழக முதல்வருக்கு பாராட்டு!

சி ரங்கராஜன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அரசு விரைந்து நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பை வேண்டுதலும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு அஇஅதிமுக துணை நிற்கும் என்னும் உறுதிமொழியும்!

கொரோனா நோய்த் தொற்று காலத்திற்குப் பிறகான தமிழக பொருளாதார மேம்பாட்டிற்கென புதிய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு.

ஆங்கிலம்

ஆங்கிலம்

6. தாய்மொழி- தமிழ், உலகத்தோட உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இருமொழிக் கொள்கையே என்றைன்றைக்கும் அதிமுகவின் மொழிக் கொள்கை. எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல, எந்த மொழியும் எம் மீது திணிக்கப்படுவதை எம்மால் ஏற்க இயலாது என்ற கருத்தில் கழகம் உறுதியாய் இருக்கும்.

கல்வி உரிமை

கல்வி உரிமை

7. நீட் என்ற மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு தேர்வு மற்றும் தகுதித் தேர்வை அதிமுக ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது.

மாநிலங்களின் கல்வி உரிமையில் நீட் தேர்வு மூலம் மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற ஏழை எளிய முதல் தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும் கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும் நீட் தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அஇஅதிமுக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட காரணமாக இருந்த மத்திய கூட்டணி அரசில் பங்கு பெற்றிருந்த திமுக இப்போது உண்மைகளை மறைத்துவிட்டு நீட்தேர்வுகளைக் காட்டி அரசியல் சுயலாபங்களுக்காக கபட நாடகம் ஆடுவதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

8. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றியும் பாராட்டும்!

6 மருத்துவக் கல்லூரி

6 மருத்துவக் கல்லூரி

9. தமிழ்நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் முதற்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் அவற்றில் புதிதாக 1400 புதிய மருத்துவ பட்டப் படிப்புஇடங்களை உருவாக்கியும் இப்போது 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தும், அடுத்துவரும் ஆண்டுகளில் புதிதாக 1650 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் உருவாகவும், வகை செய்திருக்கும் கழக அரசுக்கு நன்றியும் பாராட்டும்! மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்தமைக்குப் பாராட்டும் நன்றியும்

காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றி!

திட்டமிட்டவாறு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்நது காவேரியால் பாசனம் பெறும் அனைத்து விவசாயிகளும் குறுவை சாகுபடி மேற்கொள்ள வழிவகுத்த தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு!

அரசுக்கு பாராட்டு

அரசுக்கு பாராட்டு

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம், புதிய கலை அறிவியல் கல்லூரிகள் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைத் தொடங்கி உள்ளமைக்கு கழக அரசுக்கு பாராட்டும் நன்றியும்

ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவையும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தையும் சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைத்து, ஒட்டுமொத்தமாக 1,022 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தமைக்கும் தேனி, திருப்பூர் மாவட்டங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை துவக்க நடவடிக்கை எடுத்தமைக்கும் முதல்வருக்கும் பாராட்டு

தமிழகம்

தமிழகம்

10. இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் தென் மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தக் கோரிக்கை!

குழந்தைகளின் உரிமை

குழந்தைகளின் உரிமை

11. பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய 1860ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கிட சட்டத் திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக அறிவித்திருக்கும் தமிழக முதல்வருக்கு பாராட்டு!

கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை என 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியமைக்கு தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும்!

14 ஆயிரம் கோடி

14 ஆயிரம் கோடி

12. காவேரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 700 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ள முதல்வருக்கு நன்றியும் பாராட்டும்.

விவசாயிகளின் நலன் கருதி நடப்பாண்டில் 50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு புதிய மின்இணைப்புகள் வழங்கியமைக்கு நன்றியும் பாராட்டும்!

கர்நாடகா கண்டனம்

கர்நாடகா கண்டனம்

13. காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு கண்டனம்! மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்த உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்குப் பாராட்டு!

14. தமிழகத்தின் ஒப்பற்ற முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை அழகுற அமைத்தமைக்கும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றியமைத்தமைக்கும் நன்றி!

15. அதிமுக உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடு ஒற்றுமையாய் பணியாற்றி தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பொற்கால ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம் என்று சூளூரைப்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
NO Neet, 2 way language policy in Tamilnadu- AIADMK passes 15 resolutions in executive meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X