18 தொகுதிகளில் மட்டும் அதிமுக ஜெயிக்கும்... ஓபிஎஸ் தோல்வி முகம்... தெற்கே வாஷ் அவுட்- நக்கீரன் சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெறும் 18 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக நக்கீரன் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தோல்வியடைவார் என்கிறது நக்கீரன் கருத்து கணிப்பு.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுகவுக்கு சாதகம்
மேலும் தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் தமிழகத்தில் திமுக அணியே ஆட்சி அமைக்கும் என கூறி உள்ளன. ஒன்றிரன்டு கருத்து கணிப்புகள்தான் திமுகவை விட அதிமுக அதிக இடங்களில் வெல்லும் என கூறி உள்ளன.

நக்கீரன் சர்வே
இதனிடையே நக்கீரன் வாரம் இருமுறை இதழும் தமது கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக நக்கீரன் நடத்திய கருத்துக்கணிப்பில் தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என எடுத்த சர்வே இது.

அதிமுகவுக்கு 18 தொகுதிகள்தான்
நக்கீரன் சர்வேயில் அதிமுக வெறும் 18 தொகுதிகளில்தான் வெல்ல வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 18 தொகுதிகளின் பட்டியலையும் நக்கீரன் வெளியிட்டுள்ளது.

எந்தெந்த தொகுதிகளில் அதிமுக வெல்லும்?
நக்கீரன் சர்வேபடி அதிமுக வெல்லும் வாய்ப்புள்ள 18 தொகுதிகள்: திருவள்ளூர், மைலாப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி (தனி), ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, சேலம் தெற்கு, வீரபாண்டி, பவானி, நத்தம், திண்டுக்கல், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை , அரியலூர், சிதம்பரம், திருப்பரங்குன்றம், ராஜபாளையம்

ஓபிஎஸ் தோல்வி முகம்- தெற்கே வாஷ் அவுட்
போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் வெல்லும் வாய்ப்பு இல்லை என்கிறது நக்கீரன் கருத்து கணிப்பு. தென்மாவட்டத்தில் அதிகபட்சம் 5 தொகுதிகளில் மட்டும்தான் அதிமுக வெல்லும் சாத்தியம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது நக்கீரன் கருத்து கணிப்பு.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications