'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்' விஜயகாந்த்+ ஜெயலலிதா பாணி.. விஜய்+எடப்பாடி- அதிமுக 'மெகா ஸ்கெட்ச்'
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை முற்றிலும் முறித்துக் கொண்டதாக அறிவித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலுக்கான அதிரடி வியூகங்களை ஓசையின்றி செயல்படுத்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதால் இஸ்லாமியர்கள் வாக்குகள் கணிசமாக அதிமுக பக்கம் திரும்பும் என்பது அதிமுகவின் கணக்கு. இந்த வியூகத்துக்கு அப்பால் அதிமுக பொதுச்செயலாளர் போட்டுக் கொண்டிருக்கும் 'கணக்கு வழக்கே' தமிழ்நாட்டை தாண்டவமாடச் செய்யும் என குதூகலிக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

பாஜகவுக்கு பிரதான எதிரியான உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார் விஜய். அவரை ஜோசப் விஜய் என்றுதான் ஏகடியம் செய்வது பாஜகவினர் வழக்கம். தற்போது லியோ பட விவகாரத்தில் ஆளும் திமுக அரசுடன் முட்டல் மோதல் என்கிற பேச்சு பலமாகவே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து உறுதியான தகவல் எந்தப் பக்கத்திலிருந்தும் வெளியாகவில்லை.
பாஜக, திமுகவின் எதிரி விஜய்: அதிமுகவைப் பொறுத்தவரையில் பாஜக, திமுக இரண்டையும் எதிர்த்தாக வேண்டும். பாஜக, திமுகவுக்கு எதிராக நிற்பவர் நடிகர் விஜய். அவரும் 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்குவதற்காக காத்திருக்கிறார். இதனால் நடிகர் விஜய் உடன் கை கோர்ப்பது என்கிற வியூகத்தை கையில் எடுத்திருக்கிறாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
60 தொகுதிகளில் கூட்டணி? : இது தொடர்பான தொடக்க நிலை பேச்சுகளும் தொடங்கிவிட்டனவாம். தமிழ்நாடு தழுவிய அளவில் 60 தொகுதிகளை விஜய் கட்சிக்கு ஒதுக்கிக் கொடுத்து அவர்களது வெற்றிக்கு அதிமுக பொறுப்பேற்பது என்பதுதான் முதல் கட்ட பேச்சாம். அப்படி செய்து மாபெரும் வெற்றி பெற்றால் திமுக கூட்டணிக்கு கடும் அதிர்ச்சி கொடுக்க முடியும் என்பதுதான் அதிமுகவின் திட்டமாம்.
ஜெயலலிதா-விஜயகாந்த் பாணி: அதாவது விறுவிறுவென விஸ்வரூபம் எடுத்த விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்து திமுகவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்கவிடாமல் செய்த சாட்சாத் ஜெயலலிதாவின் அதே பாணியைத்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்கிறாராம். விஜயகாந்துக்கு பதில் இப்போது விஜய்யை பயன்படுத்துவதன் மூலம் திமுகவுக்கு மிகப் பெரிய பின்னடைவைத் தந்துவிட முடியும். அதுவும் பாஜக இல்லாத கூட்டணி என்கிற போது சிறுபான்மையினர் வாக்குகள்/ இளம் தலைமுறை வாக்குகள் என வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற வாக்குகள் நம் பக்கம் வரும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமி போட்டிருக்கும் பக்கா ஸ்கெட்ச் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications