சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக கூட்டணியால்... கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு காத்திருக்கும் 'பயங்கர' ஷாக்.. அதிரடி சர்வே!

Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியால் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் அந்த கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும் என மூத்த பத்திரிகையாளர் இதயா, கருத்து கணிப்புகளை மேற்கோள்காட்டி கூறியிருக்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் ஜீவசகாப்தனின் Liberty Tamil யூ டியூப் சேனலுக்கு தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் 'துக்ளக் இதயா' அளித்த பேட்டி விவரம்:

கொங்கு மண்டலத்தில் இதுவரை எடுத்த கருத்து கணிப்புகளில் திமுகவுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் ஒரு அமைச்சர் தொகுதியில் மட்டும் அதிமுகவுக்கு 3% கூடுதலாக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அந்த அமைச்சர் தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறார்; எளிதாக அவரை மக்கள் அணுக முடிகிறது என்கிற நிலை அங்கு இருக்கிறது.

பிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம் பிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் பார்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம்

கொங்கு பெல்ட்டில் திமுக

கொங்கு பெல்ட்டில் திமுக

கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை தமிழகத்தை நாங்கள் ஆளுகிறோம் என்கிற பெருமிதம் கவுண்டர் சமூகத்துக்கு இருக்கிறது. ஆகையால் கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக இடங்களில் அங்கு வெல்லும் என்கிற நம்பிக்கை, பேச்சு அரசியல் பார்வையாளர்களிடம் இருக்கிறது. அதனால் கொங்கு மண்டலத்தை முதலில் நாங்கள் தேர்வு செய்து கருத்து கணிப்பு நடத்தினோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கவுண்டர்கள் மத்தியிலேயே திமுகவுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

பாஜக கூட்டணியால் வெறுப்பு

பாஜக கூட்டணியால் வெறுப்பு

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதை பெரும்பாலான அதிமுக வாக்கு வங்கி விரும்பவில்லை. இது அதிமுகவுக்கு சேதாரம் ஏற்படுத்துகிறது. அதிமுக அரசாங்கத்தைப் பொறுத்தவரை போக வேண்டிய அரசாங்கம் இது இல்லை என்பது எங்கள் கருத்து; சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை; நில அபகரிப்பு, அதிகார துஷ்பிரயோகம் போன்றவை இல்லை. எளிமையான ஆட்சிமாதிரிதான் நடக்கிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பதைதான் ஏற்க முடியவில்லை என்கிறார்கள்.

நிராகரிக்கும் பழங்குடிகள்

நிராகரிக்கும் பழங்குடிகள்

கொல்லிமலை பழங்குடிகள் பகுதி சேந்தமங்கலம் தொகுதிக்குள் வரும். அங்கேயும் திமுகதான் லீடில் இருக்கிறது. இப்போது சேந்தமங்கலம் அதிமுக தொகுதி. அவர்களை பொதுவாக அதிமுக வாக்கு வங்கி என்று சொல்லலாம். அவர்கள் பாஜகவை சுத்தமாக விரும்பவில்லை. அதிமுகவுக்கு 10 ஆண்டுகள் வாய்ப்பு என்பது ரொம்ப அதிகமோ என்கிற சிந்தனையும் மக்களிடத்தில் இருப்பதை கேட்க முடிந்தது. ஆக 10 ஆண்டுகாலம் அதிமுகவே ஆட்சியில் இருக்கிறார்களே என்கிற சலிப்பும் பாஜகவுடனான கூட்டணி வைத்திருக்கிறார்களே என்கிற வெறுப்பும் அதிமுகவுக்கு எதிராக கொங்கு மண்டலத்தில் இருக்கிறது.

அதிமுக வாக்கு வங்கியில் எதிர்ப்பு

அதிமுக வாக்கு வங்கியில் எதிர்ப்பு

அருந்ததியினர் காலனி பகுதிகளிலும் திமுகதான் லீடில் இருந்து கொண்டிருக்கிறது. அதிக வித்தியாசம் இல்லாமல் இருந்தாலும் அதிமுகவை விட திமுக குறிப்பிட்ட சதவீதம் கூடுதலான வாக்குகளை பெறுகிறது. அருந்ததியினர் எம்ஜிஆரின் தீவிரவிசுவாசிகளாக இருந்தவர்கள். பழங்குடியினர், அருந்ததியினர் மத்தியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் சென்றடையவே இல்லை. இவ்வாறு துக்ளக் இதயா கூறினார்.

English summary
According to the Survey Reports that AIADMK will suffer for alliance with BJP in Kongu Belt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X