கருணாநிதி, ஜெயலலிதா ஸ்டைல்.. விஜய் வந்தாலும் 45 தொகுதிகளே.. கறார் காட்டும் எடப்பாடி!
சென்னை: முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மூப்பனார் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை எப்படி சமாளித்து கூட்டணிக்குள் கொண்டு வந்து 41 தொகுதிகளை மட்டும் விட்டுக் கொடுத்தாரோ, அதேபோல் விஜய்யையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து 45 தொகுதிகளுக்குள் கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - தவெக கூட்டணி அமைவதற்கான சூழல் கனிந்து வருவதாக பார்க்கப்படுகிறது. கரூர் விவகாரம் காரணமாக தவெகவுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியினரின் செயல்பாடுகளும் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஏனென்றால் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு பின் தவெக தலைவர் விஜய் இதுவரை ஏன் வீட்டில் இருந்தே வெளியில் வராமல் இருக்கிறார் என்று தெரியாமல் அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர். இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரியாக பயன்படுத்தி கொண்டு வருகிறார். சட்டசபையிலேயே விஜய்யின் குரலாக எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அதேபோல் தவெக தனித்து நின்றால் அது திமுகவுக்கு சாதகமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதால், விஜய்யும் கூட்டணிக்காக கதவுகளை திறக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழலில், அதிமுகவின் கட்டமைப்பையும், அக்கட்சியின் வலிமையையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் விஜய்க்கு ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய, விஜய் வைக்கும் டிமாண்ட் மிகப்பெரிதாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறைந்தபட்சம் 75 தொகுதிகள், துணை முதல்வர் பதவி ஆகியவற்றுக்கு விஜய் இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ முன்னாள் முதல்வர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றவே முடிவு எடுத்திருக்கிறார்.
ஏனென்றால் 1996ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது தற்போது விஜய்க்கு இருந்த ஆதரவு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூப்பனாருக்கும் இருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் அவரை இணைத்ததோடு, 41 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைந்தது.
அப்போது விஜயகாந்த் உடன் கூட்டணி அமைக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஆர்வம் காட்டின. விஜயகாந்த் எந்த அணியில் இணைகிறாரோ, அந்த அணியே வெல்லும் என்று கூறப்பட்டது. இறுதியாக விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அப்போது விஜயகாந்துக்கு சுமார் 10 சதவிகித வாக்குகள் இருந்தன. இதனால் விஜய்யையும் அதே அளவிற்கான தொகுதிகளை கொடுத்து ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார். இதன் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் தன்னுடைய தலைமையையும் எடப்பாடி பழனிசாமியால் நிரூபிக்க முடியும் என்றும் அவர் கருதுவதாக தெரிகிறது.
-
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
தவெக அரசுக்கு எதிராக நூதன போராட்டம்... முதல்வருக்கு பார்சலில் அனுப்பிய ஹியரிங் எய்டு! -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல்












Click it and Unblock the Notifications