திருச்சி - துபாய்: 145 பயணிகளுடன் சென்ற விமானம் திருப்பி விடப்பட்டது! இஸ்ரேல் ஈரான் போரால் ரிட்டர்ன்
சென்னை: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்டு சென்ற விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பி விடப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து இன்று 12.45 மணியளவில் 145 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற விமானம் இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஐக்கிய அரபு அமீகரத்தில் வான் வழி மூடப்பட்டதால் இந்த விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பி விடப்பட்டது.
ஈரான் மீது இன்று இஸ்ரேல் திடீரென தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்தும், தெற்கு ஈரான் பகுதிகளிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தின. குறிப்பாக அமேனி இல்லம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

எனினும் கமேனி அதற்கு முன்பாகவே வேறு இடத்திற்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. தெற்கு ஈரானில் ஒரு பள்ளி மீது தாக்குதல் நடத்தியதில் பள்ளி மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானும் 5க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பல்வேறு நாடுகளில் வான் பரப்புகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று துபாய்க்கு திருச்சியில் இருந்து இன்று மதியம் புறப்பட்டு சென்றது.
மதியம் 12.45 மணியளவில் சுமார் 145 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து வான் பரப்புகள் மூடப்பட்டதால் உடனடியாக இந்த விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பி விடப்பட்டது. துபாய் வான் பரப்பை நெருங்கிய நிலையில் இந்த விமான திருப்பி விடப்பட்டது. இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
யுஏஇ, சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று துருக்கி ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், ஏர் பிரான்ஸ், நார்வே, லுஃப்தான்ஸா, ஜப்பான் ஏர்லைன் நிறுவனங்களும் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications