ஏர் இந்தியா விமான விபத்து நடந்து.. 2 வாரம் ஆகிடுச்சே.. இன்னும் வெளியே வராத உண்மை.. ஷாக் காரணம்
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 242 பேர் மற்றும் தரையில் இருந்த 33 பேர் என மொத்தம் 275 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்து 12 நாட்களுக்கு மேலாகியும், அதற்கான உண்மையான காரணம் இன்னும் வெளிவரவில்லை.
விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சி
விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். கருப்பு பெட்டி சேதம் அடைந்தது, இந்தியாவில் அதை ஆய்வு செய்யும் மையங்கள் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பது, கருப்புப் பெட்டியை வெளிநாட்டிற்கு அனுப்புவதில் ஏற்படும் தாமதங்கள் போன்ற காரணங்களால் விபத்து பற்றிய உண்மை வெளிவர தாமதமாகிறது.
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, விபத்தில் சேதமடைந்த விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. விமான விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட தீ விபத்தில் கறுப்புப் பெட்டி பதிவுக் கருவி வெளிப்புறத்தில் பலத்த சேதமடைந்ததால், இந்தியாவில் தரவுகளைப் பிரித்தெடுப்பது கடினமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அனுப்பும் திட்டம்
சர்வதேச விதிமுறைகளின்படி, விபத்து நடந்த நாட்டின் விசாரணை அமைப்பான விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB), இந்த விபத்து குறித்து விசாரிக்க வேண்டும். அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்தின் (National Safety Transport Board - NTSB) ஆய்வகத்தில் இருந்து டிஜிட்டல் விமான தரவு சோதனை செய்யப்படும். இந்த தரவுப் பதிவிலிருந்து (Digital Flight Data Recorder - DFDR) பெறப்படும் தரவுகள் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் டெல்லியில் தலைமையகத்தில் ஆய்வகத்தை அமைத்திருந்தாலும், பலத்த சேதமடைந்த பதிவுக் கருவிகளிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுக்கும் அளவிற்கு இன்னும் முழுமையாக தயார்படுத்தப்படவில்லை. இந்திய அதிகாரிகளின் மேற்பார்வையில், முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியத்தின் குழு கறுப்புப் பெட்டியை தங்கள் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லும்" என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 53 பேர் பிரிட்டன் நாட்டினர் என்பதால், இங்கிலாந்தின் விமான விபத்து புலனாய்வு பிரிவும் (Air Accidents Investigation Branch) விசாரணையில் பங்கேற்க உள்ளது.
விமானத்தின் கறுப்புப் பெட்டி
விமானத்தின் கறுப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் விமான தரவுப் பதிவு மற்றும் காக்பிட் குரல் பதிவு (Cockpit Voice Recorder - CVR) ஆகியவை பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விபத்தின்போது ஏற்படும் அதிர்ச்சிகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். ஏனெனில் விபத்தின்போது வால் பகுதி குறைந்த தாக்கத்தையே சந்திக்கும். இருப்பினும், விபத்தின்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் தீ விபத்துகளால் கறுப்புப் பெட்டிக்கு சேதம் ஏற்படுவது வழக்கம்தான்.
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள தரவுகள் முக்கியமானவை. விமான தரவுப் பதிவு விமானத்தின் வேகம், உயரம், நேரம் போன்ற பல தொழில்நுட்ப அளவுருக்கள் பற்றிய தகவல்களை வழங்கும். காக்பிட் குரல் பதிவியில் விமானி உரையாடல்கள், எச்சரிக்கைகள் உள்ளிட்ட காக்பிட்டில் பதிவான ஆடியோ பதிவுகள் இருக்கும்.

சேதமடைந்த கறுப்புப் பெட்டியிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கும் பணி இரண்டு நாட்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகலாம். பதிவுக் கருவி சேதமடைந்துள்ளதால், டேட்டா இழப்பு ஏற்படாமல் இருக்க, உள்ளே இருக்கும் மெமரி கார்டை கவனமாக அகற்ற வேண்டும். மேலும், மின்னணு சர்க்யூட்டும் சேதமடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணையின் பல்வேறு கோணங்கள்
விசாரணையாளர்கள் விமானத்தின் இறக்கைகளில் உள்ள ஃப்ளாப்ஸ் சரியாக நீட்டப்பட்டிருந்ததா, தரையிறங்கும் சக்கரம் ஏன் மேலே செல்லவில்லை என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மின்னணு கோளாறு அல்லது எரிபொருள் கலப்படம் காரணமாக இயந்திரங்கள் செயலிழந்தனவா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
நவீன விமானங்களில் முக்கியமான பாகங்கள் அல்லது அமைப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இருக்கும். இதனால் ஒரு பாகம் செயலிழந்தாலும் மற்றொன்று செயல்படும். இந்த விமானம் ஒரே ஒரு எஞ்சின் உடன் 345 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க இரண்டு எஞ்சினும் பழுதானதா என்றும் விசாரணை செய்யப்படுகிறது.
விபத்துக்குள்ளாகும் முன் விமானியால் அனுப்பப்பட்ட அவசர கால அழைப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. விமானி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு பதிலளிக்கவில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் சமீர் குமார் சின்ஹா தெரிவித்திருந்தார்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்புப் பெட்டி அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு, தரவுகள் பிரித்தெடுக்கப்பட்டு, விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரும்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications