சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டப்படி ரூ.15,444 போனஸ் வரவேண்டும்.. ஆனால்.. போக்குவரத்து துறை செயலாளருக்கு ஏஐடியுசி கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் நடப்பாண்டிலும் 10% போனஸை அரசு அறிவித்தது.

ஆனால் இந்த போனஸை 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கில் கொண்டு போனஸ் வழங்கப்பட வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தி போக்குவரத்து துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

 என்கிட்ட நக்கலா பேச கூடாது! கெட் அவுட் ஐ சே! சீமான் தமிழரே இல்லை..மலையாளி! எச்.ராஜாவுக்கு என்னாச்சு? என்கிட்ட நக்கலா பேச கூடாது! கெட் அவுட் ஐ சே! சீமான் தமிழரே இல்லை..மலையாளி! எச்.ராஜாவுக்கு என்னாச்சு?

போனஸ்

போனஸ்

மேற்குறிப்பிட்டதைப்போல ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையன்று அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தீபாவளிக்கு 10% போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக 20% போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பால் இந்த போனஸ் 10% ஆக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. தற்போது பொருளாதார நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், போனஸை 20%ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடிதம்

கடிதம்


இதனைத் தொடர்ந்து 'தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம்' (ஏஐடியுசி) இதே கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. அக்கடிதத்தில், "தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், ஏஐடியுசி சார்பில் 25% போனஸ் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம். ஆனால், ரூ. 7 ஆயிரத்தை வருமான வரம்பாக கருதி, 10 சதவீத போனஸாக ரூ.8400 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படியான போனஸ்

சட்டப்படியான போனஸ்

திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி போக்குவரத்து தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால், 10 சதவீத போனஸாக ரூ. 15,444 வழங்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அறிவித்துள்ள போனஸ் தொகை போக்குவரத்து ஊழியர்களின் குடும்ப தேவைக்கு போதுமானதாக இல்லை. எனவே, தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, தமிழக அரசு சட்டப்படியான போனஸையாவது வழங்க முன்வர வேண்டும்.

10 சதவிகிதம்

10 சதவிகிதம்

பேருந்து தூய்மை பணியாளர், பாதுகாவலர்கள் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பேருந்து நடத்துநர்களிடம் கையேந்தி நிற்கின்றனர். எனவே இவர்களுக்கும்,போனஸ் வழங்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளது. அதேபோல தீபாவளி முன்பணமாக ரூ.10,000 தருவது குறித்து எவ்வித அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என பாமக நிறுவன ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணை தொகை என 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Every year on the occasion of Diwali, bonus is given to C and D category employees of the government. In this way, the government announced 10% bonus for the current year as well. The AITUC union has written a letter to the Transport Secretary demanding that the bonus should be paid based on the minimum wage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X