அன்புவிடம் “ஐடி” ரெய்டு.. அஜித்தின் “பைக்” ரெய்டு! இரண்டுக்கும் தொடர்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை காரணமாக அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் 61 வது படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்.
திரில்லர் படமாக உருவாகி வரும் இது பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறதாம். அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா தலைநகர் ஐதராபாத், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.

அஜித் படப்பிடிப்பு நிறுத்தம்
இதனை தொடர்ந்து பாங்காங்கில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பொங்கல் பண்டிகையன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்றே தெரிகிறது. அதற்கு காரணம் நிதிப்பற்றாக்குறை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜித் பைக் ரெய்டு
இது தொடர்பாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவிக்கையில், "படப்பிடிப்பு நின்றதன் காரணமாகவே நடிகர் அஜித், நடிகை மஞ்சுவாரியருடன் பைக் ரெய்டு சென்று இருக்கிறார். தயாரிப்பாளர் போனி கபூர் கோலிவுட்டின் பிரபல சினிமா பைனான்ஷியரான மதுரை அன்புச்செழியனிடமே நிதி பெற்று அஜித் படத்தை தயாரித்து வந்தார்." என்றார்.

அன்பு வீட்டில் ஐடி ரெய்டு
இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அன்புச்செழியன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்களில் சோதனை நடத்தினர்..

அறிக்கை
மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்ற திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவடைந்ததை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

சிண்டிகேட்
இதில் ரூ.200 கோடி முறையற்ற வருவாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவித்தது.

நிதி பற்றாக்குறை
"வருமான வரித்துறை சோதனை காரணமாக அன்புச்செழியனிடம் நிதி பெற்று தயாரிக்கப்பட்டு வந்த பல திரைப்படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளன. ஐடி ரெய்டுக்கு பிறகு அன்புச்செழியன் யாருக்கும் நிதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் 61 படத்திற்கு தேவையான நிதி இல்லாததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது." என்கிறார் பிஸ்மி
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications