சென்னை மேயர் பிரியாவை சந்திக்க வந்த அமெரிக்க மேயர்! வேற லெவல் முயற்சி! பின்னணி இது தான்!
சென்னை: அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகர மேயர் ரான் நிரன்பர்க் சென்னை வந்திருக்கும் நிலையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் மூலம் சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு (Sister city affiliation) அடிப்படையில் அமெரிக்காவின் சான் ஆண்டோனியா நகரமும் சென்னை மாநகரமும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக பேசப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு;
டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவு.. ஆம்ஆத்மி முன்னிலை.. விரட்டும் பாஜக.. கருத்து கணிப்பு பலிக்குதே!

சான் ஆன்டோனியோ
சென்னை மாநகராட்சி மற்றும் அமெரிக்க நாட்டின் சான் ஆன்டோனியோ நகரம் ஆகியவை இணைந்து செயல்படுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்றுநடந்தது. இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங்பேடி, மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரித்தார்.

மேயர் பிரியா
இந்நிகழ்வில் மேயர் பிரியா, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் ஆன்டோனியோ நகரத்தின் மேயர் ரான் நிரன்பர்க் மற்றும் அவரது குழுவினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து சகோதரத்துவ நகரங்களின் இணைப்பாக 2 மாநகரங்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு விஷயங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும்வகையில் 2 மேயர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவோம் எனத் தெரிவித்தனர்.

அமெரிக்க மேயர்
இதையடுத்து சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்ட அரங்கைஅமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகர மேயர் மற்றும் அவரது குழுவினர் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் துணை மேயர் மகேஷ்குமார், சான் ஆன்டோனியோ நகர முன்னாள் மேயர் பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தூதர் ஜூடித் ரவின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழுவுடன் சந்திப்பு
இதனிடையே சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தை பார்த்த அமெரிக்க மேயர் மற்றும் குழுவினர் அசந்து போனார்கள். பழமையான கட்டிடத்தை புதுப்பொலிவுடன் பராமரித்து வருவது பற்றி வியந்து கூறினார்கள். மண்டல நிலைக் குழுத் தலைவர்களை அமெரிக்க குழுவினருக்கு மேயர் பிரியா ராஜன் அறிமுகம் செய்து வைத்தார்.