இப்போ பேசுனா சரியா இருக்காது! ஓபிஎஸ் பற்றி கேள்வி கேட்டதும்.. சட்டென எடப்பாடி சொன்ன பதில்!
சென்னை: அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நிர்வாகிகள் நீக்கம் செய்வது குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் இருந்த நிலையில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையேயான கருத்து வேறுபாட்டை இது வெளிப்படையாக காட்டியது.
கடந்த மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவமானப்படுத்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி போட்டு நீக்கம்
அதன்பிறகு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஓ பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்களை நீக்கினார். தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மொத்தம் 100 பேரை அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளனர்.

எம்எல்ஏக்கள் ஆலோசனை
இந்நிலையில் தான் அதிமுக தலைமை அலுவலகம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 63 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆலோசனை
இந்த கூட்டத்தில் 63 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது. தேர்தலில் ஓட்டளிப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும்? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகயைாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
Recommended Video

சரியாக இருக்காது
நாளை நடைபெற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். தேர்தலில் வாக்களிப்பது எப்படி, தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றி எங்களின் எம்எல்ஏக்களிடம் எடுத்து கூறினோம்'' என்றார். இந்த வேளையில் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் சார்பில் நிர்வாகிகள் நீக்கப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் அதிமுக விவகாரம் குறித்து பேசுவது என்பது சரியாக இருக்காது'' எனக்கூறி சென்றார்.












Click it and Unblock the Notifications