நண்பனை கொலை செய்த டிரைவர்! உடலுடன் இரு நாள்.. ஒரே அறையில் இப்படியா? தலைசுற்றிப் போன போலீஸ்!
சென்னை : சென்னை அருகே திருவேற்காட்டில் குடிபோதையில் நண்பரை சுத்தியால் அடித்து கொலை செய்த நபர் போலீசில் சரண் அடைந்துள்ள நிலையில், கொலை செய்துவிட்டு இறந்தவரின் உடலுடன் இரண்டு நாட்கள் அறையில் இருந்த தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திருவேற்காடு, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் முருகன்(42), ஆட்டோ டிரைவரான இவர் இன்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்றார்.
குடிபோதையில் இருந்த அவரை அங்கு பணியில் இருந்து அம்பத்தூர் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது தனது நண்பரை குடிபோதையில் சுத்தியலால் திருவேற்காட்டில் அடித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

நண்பன் கொலை
இதையடுத்து அந்த முருகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அம்பத்தூர், பட்டரவாக்கத்தை சேர்ந்த சுரேஷ்(42), என்பவர் இவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததாகவும் இருவரும் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரனமாக ஆத்திரமடைந்த முருகன் சுத்தியலால் சுரேசின் பின் மண்டையில் அடித்து கொலை செய்துள்ளார்.

உடலுடன் ஒரே அறையில்..
கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் கொலையான சுரேஷின் உடலுடன் விட்டு இரண்டு நாட்களாக அந்த அறையிலேயே தங்கி இருந்ததுள்ளார். அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாக உடல் இருந்த அறையிலேயே மது அருந்தியதோடு, உணவு சமைப்பது சாப்பிடுவது என வழக்கமான பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது கொலை செய்யப்பட்ட சுரேசின் உடலை அப்புறப்படுத்த முடியாததால் போலீசில் சரணடைய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

சரண்
இதையடுத்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சுரேஷ் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு போலீசார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர்.

கொலை வழக்கு
மேலும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து முருகனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனை கொலை செய்து விட்டு இரண்டு நாட்கள் அந்த அறையிலேயே தங்கி விட்டு போலீசில் சரண் அடைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சுரேஷ் மீது குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தூத்துக்குடி கொடூரனுக்கு இரட்டை தூக்கு.. கோவை கேஸிலும் இதே தீர்ப்பை கொடுங்க! மாணவியின் தந்தை குமுறல் -
விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications