சாப்பாட்டு ராமன்.. யானை எடுத்த "ரிஸ்க்".. லேசா மிஸ்ஸாகியிருந்தாலும் மொத்த கட்டிடமும் க்ளோஸ் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூகவலைத்தளத்தில் வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா அடிக்கடி வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த வீடியோ எடுக்கப்பட்ட நாள் மற்றும் இடம் குறித்து அவர் எதையும் குறிப்பிடாத நிலையில், பலர் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

வீடியோவில் யானை ஒன்று ஒரு கட்டடத்திற்குள் இருந்து லாவகமாக வெளியேறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

யானை

யானை

யானை என்பது எல்லோருக்கும் அச்சரியத்தை ஏற்படுத்தும் ஓர் உயிரினம். ஆனால் அதன் அளவை போலவே அதன் குணாதிசயங்களும் மூர்க்கமானவையாக இருக்கும். இருந்தும் மனிதனுக்கும் யானைக்குமான உறவு பழங்காலம் தொட்டு நீடித்து வருகிறது. அந்த வகையில் மனித குடியிருப்புகளுக்கு அடிக்கடி இந்த யானைகள் அழையா விருந்தாளியாக வரும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன. காடுகள் சுருங்குவதால் யானைகள் இவ்வாறு மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வருகின்றன.

ஞாபக சக்தி

ஞாபக சக்தி

பொதுவாக யானைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகமாக இருக்கும். சொல்லப்போனால் உயிரினங்களில் யானைகளுக்குதான் ஞாபக சக்தியும், மோப்ப திறனும் அதிகம். யானையின் ஆயுட்காலமும் நீண்டது. கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் வரை யானைகள் உயிர் வாழும். கூட்டமாக வாழும் இந்த யானைகள் வயதான பெண் யானையை கூட்டத்தின் தலைவராக கொண்டிருக்கும். இப்படி இருக்கையில் சிறு வயதில் தனது கூட்டத்துடன் குட்டி யானை ஒன்று காட்டை சுற்றி வருகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அட்டகாசம்

அட்டகாசம்

இதே ஒரு பத்தாண்டுகளுக்கு பிறகு அதே பாதையில் இந்த யானை நடக்க நேர்ந்தால் அந்த வழியை எளிதாக நினைவுக்கு கொண்டு வந்து சென்று சேர வேண்டிய இடத்திற்கு சரியாக சென்றுவிடும். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த பகுதியில் மனிதர் ஏற்படுத்தியிருக்கும் புதிய குடியிருப்புகள் யானையின் ஞாபக சக்திக்கு சவால் விடுக்கும். இதனால் குழப்பமடையும் யானைகள் அங்கு அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. ஆனால் இந்த செய்தி யானையின் அட்டகாசம் பற்றியதல்ல.

 உணவுக்காக ரிஸ்க்

உணவுக்காக ரிஸ்க்

சுசந்த நந்தா ஷேர் செய்துள்ள வீடியோவில் யானை ஒன்று ஒரு கட்டடத்திற்குள் இருந்து மெல்ல வெளியேறுகிறது. முன்னதாக இது உணவு தேடி இந்த கட்டடத்திற்குள் நுழைந்துள்ளது. யானைக்கு நாய்களை விட மோப்பத் திறன் அதிகம். எனவே எவ்வளவு தூரத்தில் உணவு பொருட்கள் இருந்தாலும் அதை இது கண்டுபிடித்துவிடும். எனவே, இந்த கட்டடத்தில் இருந்த உணவு பொருட்களை யானை அடையாளம் கண்டு அதை உண்ண இங்கு வந்திருக்கிறது.

கரும்பு?

கரும்பு?

ஆனால் கட்டடத்தின் நுழைவு பகுதி மனிதர்கள் செல்லும் அளவில்தான் இருக்கிறது. இந்த வழியில் உள்ளே சென்று கிடைத்ததை திண்றுவிட்டு இதே வழியில் மிகவும் லாவகமாக வெளியேறும் காட்சி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. வீடியோவில் இது எந்த இடம் என்ன தேதி என்பதை சுசந்த நந்தா குறிப்பிடவில்லை. எப்படியாயினும் இந்த வீடியோ ஏறத்தாழ 9,000 பார்வையாளர்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. அந்த கட்டடத்தில் கரும்பு இருந்திருக்கலாம் அதனால்தான் யானை இவ்வளவு ரிஸ்க் எடுத்திறது என்று சிலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+