பல நூறு கோடி புழக்கம்.. ஆனாலும் சிக்காத ‘அன்பு’.. ஆவணங்கள் கிடைக்காமல் திணறும் ஐ.டி அதிகாரிகள்?
சென்னை : சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், ஐடி அதிகாரிகள் எதிர்பார்த்த அளவில் ஆவணங்கள் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை, மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இன்றும் இரண்டாவது நாளாக ஐடி ரெய்டு நடந்து வருகிறது.
இந்த ரெய்டில் கணக்கில் வராத ரூ. 13 கோடி ரொக்கப் பணம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பல நூறு கோடி புழங்குவதாக இன்ஃபார்மர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ரெய்டில் இறங்கிய ஐ.டி.அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச்செழியன், மதுரையை மையமாகக் கொண்டு கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களைத் தயாரிப்பது, விநியோகிப்பது போன்றவற்றைச் செய்து வருகிறார். சினிமா பைனான்சியரான இவர் தான் தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசிப் படங்களுக்கு பைனான்ஸ் செய்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் பலருக்கும் இவர் நெருக்கம். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் முக்கியமானவராக அறியப்படுகிறார் அன்புச்செழியன். சினிமா பைனான்சியராக மட்டுமின்றி தயாரிப்பாளர், விநியோகஸ்தர், என கோலிவுட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கொடிகட்டிப் பறக்கிறார் அன்புச்செழியன்.

ஏற்கனவே ரெய்டு
கடந்த 2020-ஆம் ஆண்டும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்ததாக வெளியான தகவலின் அடிப்படையில், ஏ.ஜி.எஸ் நிறுவனம், நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், கணக்கில் வராத ரூ.77 கோடி பணத்தைக் கைப்பற்றினர். அன்புச்செழியன் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாகவும் வருமான வரித்துறை அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தது.

40க்கும் மேற்பட்ட இடங்களில்
இந்நிலையில் நேற்று, தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புச்செழியன் வீடு, தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மேலும், மதுரை காமராஜர் புரத்தில் உள்ள அன்புச்செழியனின் வீடு, மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள 'கோபுரம்' ஹோட்டல், செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் தியேட்டர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.

கதிகலங்கிய கோலிவுட்
இவரைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், வேலூர் திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் உள்ளிட்டோர் வீடுகளிலும், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளிகளுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த வருமான வரித்துறை சோதனை கோலிவுட்டை ஆட்டம் காணச் செய்துள்ளது.

பெரிதாக பலன் இல்லை
இந்த ரெய்டில் கணக்கில் காட்டப்படாத ரூ. 13 கோடி பணம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ரெய்டில் பெரிய அளவில் ஆவணங்களோ, கொடுக்கல் வாங்கல் தொடர்பான கணக்கு வழக்கு விவரங்களோ சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பல நூறு கோடி எதிர்பார்ப்புடன் அதிரடி ரெய்டில் இறங்கிய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அன்பு டீலிங்
பைனான்சியரான அன்புச்செழியன், தன்னை நாடி வரும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு, எவ்வித ஆவண சமர்ப்பணங்களையும் கேட்காமல் உடனடியாக ரொக்கமாகவே பணத்தை வழங்கி விடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால், பணத்தை திரும்ப வசூலிப்பதில் இவரது டீலிங் வேறு மாதிரியாக இருக்கும் எனக் கூறுகிறார்கள். இருந்தாலும், சிக்கல் இல்லாமல் பணம் கிடைப்பதால் முக்கிய தயாரிப்பாளர்கள் பலரும் இவரிடமே பணம் பெற்று வருகிறார்களாம்.

இன்கம் டேக்ஸுக்கு பறந்த இன்ஃபர்மேஷன்
சமீபத்தில் இவர் பைனான்ஸ் செய்து வெளியான படங்கள் பெரும் லாபத்தை எடுத்துள்ளதால், இவருக்கு பெரிய அளவிலான பணம் கைமாறியதாக இன்ஃபார்மர் மூலம் இன்கம் டேக்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் பெரிய படங்கள் பலவற்றிற்கு அன்புச்செழியன் பைனான்ஸ் செய்து வருவதால் பல நூறு கோடி புழங்கி வருவதாக அதிகாரிகளுக்கு சேதி கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த ரெய்டை மேற்கொண்டுள்ளனர்.

ஆவணங்கள் சிக்கவில்லை
ஆனால், இந்தச் சோதனையில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கூட கிடைக்காமல் அதிகாரிகள் திணறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரொக்கப் பணம் அதிகளவில் கையாள்வதாக புகார் வந்த போதும், எதிர்பார்த்த அளவுக்கு இந்த ரெய்டில் எதுவும் சிக்கவில்லை என்கிறார்கள். இந்த ரெய்டு சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய போதிலும், வலுவான பிடி கிடைக்காமல் வருமான வரித்துறை தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications