சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலின் Vs அன்புமணி.. எங்க கிட்டேயும் "பிகே" இருக்காங்க.. தொகுதிக்கு லட்சம் வாக்குகள்.. பாமக பிளான்

திமுகவுக்கு இணையாக பாமக வியூகம் வகுக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: முக ஸ்டாலினா.. அன்புமணியா என்ற விவாதம் கிளம்பி விட்டது.. திமுகவுக்கு செம டஃப் கொடுக்க பாமக ரெடியாகிவிட்டது.. "உங்களுக்கு மட்டும்தான் "பிகே" இருக்காரா.. எங்களுக்கும் நிறைய பிகே இருக்காங்க... நாங்களும் வியூகம் அமைப்போம்.. அதிரடிகளை காட்டுவோம்" என்று ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகளை குறி வைத்து பாமக களம் இறங்கி உள்ளது!

திமுக ஆட்சி கட்டிலில் உட்கார்ந்து ரொம்ப வருடமாகிறது.. 2 முறை நழுவ விட்டதை இந்த முறை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டுள்ளது. இதற்காக திமுகவின் சில மூத்த தலைவர்களின் அதிருப்தியை கூட சம்பாதித்து கொண்டு, வடக்கில் இருந்து பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக களம் இறக்கி உள்ளது.

இவரது ஆலோசனைபடியேதான் ஒவ்வொரு அணுவும் திமுக தரப்பில் அசைந்து வருகிறது!! அதற்கேற்றபடி பிரசாந்த கிஷோரின் வியூகங்களும் சரவெடியாக உள்ளது.. இது அதிமுக தரப்புக்கும் லேசான கிலியை கலக்கத்தை தந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஒரு ஆலோசகரைதான் பாமகவும் தேடி சென்றுள்ளது. அந்த ஆலோசகர் ஒருவர் இல்லை.. முப்படைகள் ஆவர்.

முப்படைகள்

முப்படைகள்

ஆம்... அன்புமணியின் முப்படைகள் இவர்கள்.. இந்த அமைப்பை சத்தமே இல்லாமல் உருவாக்கி வருகிறார்கள். அணைக்கட்டு, பாப்பிரெட்டி பட்டி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சோழிங்கர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்போரூர், காஞ்சிபுரம், வானூர், செஞ்சி, மைலம், விருதாச்சலம், விக்கிரவாண்டி, புவனகிரி ஆகிய 16 தொகுதிகளிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி

மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி

பாமக செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு இதை பற்றி சொல்லும்போது, "கடந்த தேர்தலில் "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற கோ‌ஷத்தோடு அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்தோம்... அந்த தேர்தலில் 6 சதவீத வாக்குகளையும் பெற்றோம். தற்போது தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நெருங்குகிறது... மற்ற கட்சிகள் கார்பரேட் நிறுவனங்களை நம்பி இருக்கிறது... நாங்கள் ஒவ்வொரு தொகுதி மக்களையும் நம்பி இருக்கிறோம்... அந்த அடிப்படையில் தான் இந்த முப்படைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதாவது அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படை, பொதுமக்கள் படை என்பதுதான் முப்படை.

4 ஆயிரம் பேர்

4 ஆயிரம் பேர்

ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சியை சாராமலும், அரசியலை விட்டு விலகி இருக்கும் இளைஞர்களை தொடர்பு கொண்டு தொகுதிக்கு 4 ஆயிரம் பேரை கொண்ட தம்பிகள் படை, 2 ஆயிரம் இளம் பெண்களை கொண்ட தங்கைகள் படையை உருவாக்குகிறோம். இந்த தம்பி, தங்கைகள் படையினருடன் அன்புமணி கலந்துரையாடுவார். அவர்களின் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்... வாக்காளர்களை கவருவது எப்படி? பிரசாரங்கள் செய்வது எப்படி என அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தம்பி - தங்கைகள்

தம்பி - தங்கைகள்

இப்படையை சேர்ந்த ஒவ்வொருவரும் தலா 50 வாக்காளர் என்ற ரீதியில் சேர்த்து பொதுமக்கள் படையை உருவாக்குவார்கள். அப்போது நேரடியாக பாமக இதுவரை செய்துள்ள சாதனைகள், மக்களுக்காக நடத்திய போராட்டங்கள் உள்ளிட்டவற்றை வீடுகள்தோறும் கொண்டு செல்வார்கள்... ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் பேரை குறி வைத்து முப்படைகள் உருவாக்கப்படுகிறது... அதில் 16 தொகுதிகள் முடிவடைந்துள்ளன... கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களின் வெற்றிக்கு இந்த முப்படைகள் துணை நிற்கும்" என்றார்.

திண்ணை பிரச்சாரம்

திண்ணை பிரச்சாரம்

பொதுவாக, எந்நேரமும் அன்புமணி மக்களிடம் நெருங்கியே இருந்து வருகிறார்.. அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுவதுதான் அக்கட்சி வாக்கு சதவீதத்தை தக்க வைத்து கொள்வதன் முக்கிய ஆணிவேர்.. அதேபோல டாக்டர் ராமதாஸின் திண்ணை பிரச்சாரமும் வலுவான ஒரு யுக்தி.. என்னதான் கார்ப்பரேட் ஐடியாக்கள் கிடைத்தாலும், மக்களோடு மக்களாக கலந்து பேசும்போது அவர்களின் உணர்வுகளை நேரடியாக பார்க்கும்போதும், பேசும்போதும் அந்த தலைவர் சக்தி வாய்ந்தவராக உருவாகிறார்.. இதைதான் எம்ஜிஆர் சிறப்பாக செய்தார்.. அந்த வகையில் அன்புமணி எடுத்து வரும் முப்படைகள் ஐடியா வலிமை வாய்ந்ததே!

வேல்முருகன்

வேல்முருகன்

அதே சமயம் திமுகவையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.. வன்னிய ஓட்டுக்கள் திமுகவுக்கு சாதமாக விழும் எல்லா முயற்சிகளையும் இனி வேல்முருகன் இறங்கி எடுப்பார் என்றே நம்பப்படுகிறது.... வட மாவட்டத்தில் பாமகவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வேல்முருகனுக்கு உள்ளது... இன்னொரு பக்கம் காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் வேல்முருகனுக்கு துணையாக இருந்து வருகிறார்கள்.

பிகே - முப்படைகள்

பிகே - முப்படைகள்

இவை அத்தனையையும் திமுகவுக்கு வாக்குகளாக மாற்ற வேல்முருகன் களம் இறங்குவார் என தெரிகிறது... பாமக பெல்ட்டில் உள்ள வேல்முருகனை வைத்து வாக்குகளை அள்ளப் பார்க்கிறது திமுக! ஒருபக்கம் பிரசாந்த் கிஷோர் & இன்னொரு பக்கம் வேல்முருகன் என திமுக கணக்கு போட்டு வருகிறது!! பார்ப்போம் அன்புமணியின் முப்படைகளா அல்லது ஸ்டாலினின் பி.கே.வா என்று!!

English summary
dr anbumani ramadoss army is preparing for assembly elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X