அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு: நெயில்பாலிஸ் போட தடை - வழிகாட்டு நெறிமுறைகள் இதோ
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சென்னை: அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்
அங்கன்வாடி மையம் வரும் இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1585 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 1,600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு வருகின்ற 6ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க வேண்டும். அங்கன்வாடிகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
2 வயது முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு சத்துணவு மட்டும் 11.30 முதல் 12.30 க்குள் தர உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது.
அங்கன்வாடி பணியாளர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு, செயற்கை நகங்கள் ஏதும் பயன்படுத்தக்கூடாது. மூக்கு சொரிதல், தலை கோதுதல், கண்கள், காது, வாயை தேய்த்தல், எச்சில் துப்புவது தவிர்க்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு 40 நொடிகள் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அங்கன்வாடி மையம் வரும் இரண்டு முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிவது கட்டாயமில்லை

காலாவதியான தரமற்ற பொருட்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை உண்ணுவதற்கு தகுதியுடைய அங்கன்வாடி குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களோ அல்லது அதற்கு ஈடாக உணவு பாதுகாப்பு தொகையோ வழங்கப்படமாட்டாது
அங்கன்வாடி ஊழியர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அங்கன்வாடி மையத்திற்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகவே பள்ளி, கல்லூரிகள், பாலர் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சத்துணவு கிடைக்காமல் பல மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர். பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் உலர் உணவுப்பொருட்கள்,முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 2 முதல் 6 வயது வரை உள்ள அங்கன்வாடி மையங்களை திறக்கவும் சூடான சத்துணவு கொடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications