அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மீண்டும் மாற்றம்.. ஜனவரி 19, 20ல் பரீட்சை.. வெளியான புதுஅறிவிப்பு
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலைழக்கத்தில் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வுகளுக்கு மாற்று தேதி வெளியானது. தற்போது மீண்டும் தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 மற்றும் 10 தேதிகளில் தேர்வுகள் நடைபெற இருந்தது.

இந்த வேளையில் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகி கரையை கடந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டன.
இதன் காரணமாக டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 10ம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து டிசம்பர் 9ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதியும், டிசம்பர் 10ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் மாற்று தேதி அறிவித்தது.
இந்நிலையில் தான் தற்போதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் 2023 ஜனவரி மாதம் 19ம் தேதியும், டிசம்பர் 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் 2023 ஜனவரி மாதம் 20ம் தேதியும் நடைபெறும் என இன்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications