சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு

அதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவின் அடிப்படையில் சேவை பணிகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிடப்படுகிறது.

18% ஜிஎஸ்டி

18% ஜிஎஸ்டி

அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், சான்றிதழ்கள் தொலைந்து போனாலும், மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கும்,விடைத்தாள்களின் நகல் பெறுவதற்கும், எந்த தேதியில் மாணவர் பட்டம் பெற்றார் என்பதற்குச் சான்று அளிக்கும் சான்றிதழ்கள் ஆகிய 16 சேவைகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் கிடையாது?

எதற்கெல்லாம் கிடையாது?

அதே வேளையில் தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், புரோவிஷனல் சான்றிதழ், டிகிரி சான்றிதழ், ரேங்க் சான்றிதழ், மறு ஆய்வு கட்டணம் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு தற்போது ஒரு தாளுக்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

வியாபார நிறுவனங்கள், கடைகளைபோல் அண்ணா பல்கலைக்கழகமும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை கொண்டு வந்துள்ளது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கொரோனா காலத்தில் கல்லூரிகள் பல மாதங்கள் மூடப்பட்டு இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

இறங்கி வந்த அரசு

இறங்கி வந்த அரசு

நேரடி தேர்வு என்ற அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சியும் கோரிக்கை விடுத்து இருந்தது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் முதல்தான் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது. இந்த பிரச்சினையே இப்போதுதான் முடிந்திருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஜி.எஸ்.டி அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary
Anna University has announced that 18% GST will be levied on 16 services provided to students. This has come as a shock to the students. Anna University's GST announcement has caused controversy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X