சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாலை பேசிக்கலாம்.. ஜெயக்குமார் ஒன்று சொல்ல.. புதிர் போட்டு பேசிய அண்ணாமலை.. என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் நீடிப்போம் என்று விசிக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைப்பண்பு சரியில்லை, கட்சியினரை அவர் சரியாக கட்டுப்படுத்தவில்லை என்று ராமதாஸ் விமர்சனம் வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார்.

இந்த நிலையில் இன்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரோ, அதிமுகவை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்கிறது. அதில் மாற்றம் கிடையாது. எங்கள் கூட்டணியில் பாமக மட்டும்தான் இல்லை. மற்றபடி பாஜக இன்னும் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பாஜக இடையிலான கூட்டணி தொடரும் என்று கூறுவது போல ஜெயக்குமார் பேசி இருந்தார்.

 அடுத்த மாதம் உயரலாம்.. ஐசியு வார்டில் உள்ள அனைவருக்குமே ஒரு ஒற்றுமை.. ராதாகிருஷ்ணன் அலார்ட் அடுத்த மாதம் உயரலாம்.. ஐசியு வார்டில் உள்ள அனைவருக்குமே ஒரு ஒற்றுமை.. ராதாகிருஷ்ணன் அலார்ட்

 பேட்டி

பேட்டி

இந்த நிலையில்தான் அதிமுகவுடன் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் தூய்மை பணிகளை மேற்கொண்டுவிட்டு அண்ணாமலை அளித்த பேட்டியில், இன்றில் இருந்து செப்டம்பர் 17ல் இருந்து அக்டோபர் 7 வரை நாங்கள் சேவை தினமாக கொண்டாட உள்ளோம். பிரதமர் மோடி மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல போகிறோம். தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டி எல்லாம் பிரதமர் மோடி மக்களுக்கு எப்படி தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறாரோ அப்படி அவரின் வாழ்க்கையை மக்களிடம் கொண்டு செல்ல இருக்கிறோம்.

பாஜக

பாஜக

மோடி ஜியின் வாழ்க்கையை மக்களிடம் எடுத்து செல்ல இருக்கிறோம். மிகப்பெரிய அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் இதை எடுத்து செல்ல இருக்கிறோம். இதற்காக பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருக்கிறோம். பிரதமர் மோடியின் நலத்திட்டங்களால் அதிகம் பயன் அடைந்தது தமிழ்நாடுதான். அதை மக்களிடம் தெரிவிப்போம். இன்றைய நாள் எங்களுக்கு மிக முக்கியமானது. இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள்.

தலைவர் பிறந்தநாள்

தலைவர் பிறந்தநாள்

இன்று நிறைய தலைவர்களுக்கு பிறந்த நாள் இருக்கலாம். பலர் பலரின் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையான சமத்துவத்தை, அடித்தட்டு மக்களுக்கு உண்மையான சமூக நீதியை கொடுத்த பிரதமர் மோடியின் பிறந்த நாளை தமிழ்நாடு மக்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த 20 நாட்களும் நாங்கள் கொண்டாட இருக்கிறோம். எல்லா தலைவர்களுக்கும் பிறந்த நாள் கொண்டாடலாம்.

சமூக நீதி

சமூக நீதி

அவரவர் தலைவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் தவறு இல்லை. கொண்டாடலாம். எங்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு, கடைக்கோடியில் இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்த பாரத பிரதமர் மோடிக்கு நாங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறோம். நாங்கள் எல்லாம் பார்த்து வளர்ந்த தலைவர் பிரதமர் மோடிதான். தமிழ்நாடு மக்களை கேட்டால் தெரியும். சமூக நீதியை நிலை நாட்டி இருக்கிறார், சமூகத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

கூட்டணி

கூட்டணி

கூட்டணி பற்றி இப்போது பேச முடியாது. சாயங்காலம் 5 மணிக்கு கூட்டணி பற்றி பேசிவிடுவோம் என்று அண்ணாமலை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பது பற்றிய அறிவிப்பை இன்று மாலையை வெளியிட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெறாது என்று அறிவித்துள்ள நிலையில் பாஜக கூட்டணி குறித்த முடிவை எடுக்கும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

 தேர்தல்

தேர்தல்

தனிப்பட்ட பலத்தை சோதிக்கும் வகையில் பாஜக கூட்டணியில் தனித்து நிற்குமா அல்லது அதிமுகவுடன் கூட்டணியில் 9 மாவட்ட தேர்தலை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடக்காமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடக்க உள்ளது. நெல்லை, தென்காசி தவிர்த்து மற்ற மாவட்டங்கள் வட மாவட்டங்களில் இங்கு பாஜகவிற்கு கொஞ்சம் கணிசமான வாக்குகள் உள்ளன.

Recommended Video

    Thalaivi-யில் DMK செய்த தொல்லை Scenes இல்லை-Jayakumar | Oneindia Tamil
    பவர்

    பவர்

    நெல்லையில் ஏற்கனவே பாஜகவிற்கு நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவாக இருக்கிறார். இதனால் இதை பயன்படுத்தி பாஜக தனித்து நின்று பவரை காட்ட நினைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநில அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து நிற்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு பாமக போல பாஜக தனி வழியில் செல்லுமா அல்லது அதிமுகவிடம் இடங்களை பகிருமா என்பது மாலை தெரிந்துவிடும்.

    English summary
    Tamilnadu: Annamalai will reveal the BJP AIADMK alliance details today for 9 districts' local body elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X