சென்னை ஐ.ஐ.டி.யில் மீண்டும் ஒரு சந்தேக மரணம்:.. ஜவாஹிருல்லா பரபரப்பு கோரிக்கை
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மீண்டும் ஒரு சந்தேக மரணம் நிகழ்ந்துள்ளதால், இதுபற்றி சிறப்பு விசாரணைக்குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

சென்னை ஐ.ஐ.டி. உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும்.
சென்னை ஐ.ஐ.டி. கல்வி வளாகத்தில் உன்னிகிருஷ்ணன் எனும் ஆராய்ச்சி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது. 'ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்த நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்ந்து தலைவிரித்தாடுகிறது.
எனவே, தான் பணியில் இருந்து வெளியேறுவதாக' அங்கு பணிபுரிந்த உதவிப் பேராசிரியர் விபின் கடிதம் கொடுத்து இருக்கிறார் என்பதனையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக மாணவர் ஒருவரின் மரணம் நிகழ்ந்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கெனவே கடந்த 2019ல் பாத்திமா லத்தீப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் நிலவும் பாரபட்சப் போக்கை சுட்டிக்காட்டிய நிலையில் மர்மமாக மரணித்தார். இதுகுறித்த சிபிஐ விசாரணையும் மர்மமாகவே உள்ளது.
நல்ல கல்வி என்பது மனிதர்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை கலைந்து சம உரிமை குறித்த புரிதலை உருவாக்குவது ஆகும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற சமூகக் கேடுகளை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது. சமூக ரீதியான பாகுபாடுகளுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உடனடியாக நீதியை நிலைநாட்ட வேண்டும்" எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கையில் கூறியுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications