25 எம்எல்ஏக்கள் புரட்சி? எடப்பாடி இல்லாத கட்சி உருவாகிறதா? என்னங்க நடக்குது அதிமுகவில்?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்துள்ளது. எடப்பாடி கையைவிட்டு எங்கே அதிமுக செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வி எழுவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென அரசியல் புரட்சி ஏற்பட தொடங்கி உள்ளது. அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக கட்சியினர் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். 6 மாஜி அமைச்சர்கள் எடப்பாடியை போய் சந்தித்து இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி இவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எதிர்த்தால் எடப்பாடியை நீக்கிவிடுவார்கள். எடப்பாடியை பொதுக்குழுவை கூட்டி நீக்கிவிடுவார்கள். அடுத்து அதுதான் நடக்கும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்க்கட்சி தலைவர்.. லோக்சபா தேர்தலில் வென்று காட்டுகிறேன் என்று நம்பிக்கையாக இருந்தார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். நமக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும். திமுக கூட்டணி உடையும் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதிமுக படுதோல்வி அடைந்தது. அதோடு இல்லாமல் எடப்பாடியை 10 தோல்வி பழனிசாமி என்று அழைக்கும் நிலை ஏற்பட்டது. இப்போது அதிமுகவில் டாப் தலைவர்கள் பலரும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர்.
இந்த முறை எடப்பாடி கையைவிட்டு எங்கே அதிமுக செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்வி எழுவதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. எடப்பாடி உடனே இருக்கும் நிர்வாகிகளே அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். அவரின் லெப்ட் ஹேண்ட், ரைட் ஹேண்ட் கூட அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர்.
2. ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று டாப் லீடர்களே அவரிடம் சொல்ல தொடங்கிவிட்டனர்.
3. கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே., இது லோக்சபா தேர்தல் என்று இல்லை.. மற்ற தேர்தல்களிலும் இதே கதைதான். இது சீனியர்களை அப்செட் ஆக்கி உள்ளது.
4. எடப்பாடியின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. அவரின் பிரச்சாரம் பெரிதாக கொங்கில் கூட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அப்படி இருக்க அவருக்கு மாஸ் இமேஜ் இல்லை என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் வைக்கப்பட்டு வருகிறது.
5. எடப்பாடி இத்தனை காலம் கட்சியை கட்டுப்படுத்த காரணமாக இருந்த டாப் தலைவர்களே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். அப்படி இருக்க அவர் இனி எப்படி கட்சியை கட்டுப்படுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
6. தென் மண்லடத்தில் அதிமுக கடுமையான சரிவை சந்தித்து உள்ளது. கட்சி படுமோசமான பின்னடைவை சந்தித்து உள்ளது. அங்கே உட்கட்சி மோதலும் உச்சத்தில் உள்ளது.
7. என்ன நடந்தாலும் எடப்பாடி இதை ஏற்றுக்கொள்ள மாட்டார். ஓ பன்னீர்செல்வம், சசிகலா உள்ளே வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி நடந்தால்.. எடப்பாடி என்ன ஆவார்.. கட்சியின் டாப் லீடர்கள் சொல்வது எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எடப்பாடி என்ன ஆவார்.. எடப்பாடி இல்லாத அதிமுக உருவாக்கி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
8. கிட்டத்தட்ட தென் மண்டலம், கொங்கு மண்டலம், வடமண்லடம் என்று 3 மண்டலங்களை சேர்ந்து 10 தலைவர்கள், 25+ எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு இதில் பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளனராம்.
9. கடந்த 1 வாரமாக எடப்பாடி மட்டுமே ஓ பன்னீர்செல்வத்தின் விமர்சனங்களுக்கு பதில் சொல்கிறார். மற்ற நிர்வாகிகள் யாரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு பதில் சொல்லவில்லை. அப்படி இருக்க எடப்பாடி தனித்து விடப்பட்டு விட்டாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications