"விடமாட்டாம்".. டென்ஷனில் பாஜக.. பிரதமர் படம் எங்கே.. "மெயின் காரணமே ஸ்டாலின்".. பளிச்னு சொன்ன திமுக
பிரதமர் போட்டோ விளம்பரங்களில் ஏன் இல்லை என்று திமுக விளக்கம் தந்துள்ளது
சென்னை: பிரதமர் மோடி போட்டோ, செஸ் விளையாட்டு விளம்பரங்களில் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து திமுக தரப்பில் முக்கிய காரணம் சொல்லப்பட்டுள்ளது.
Recommended Video
இன்று நடக்க போகும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளது.. எனினும், இது தொடர்பாக வெளியாகி இருந்த விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
எங்கு திரும்பினாலும், முதல்வர் ஸ்டாலின் போட்டோக்களே இருப்பதை பார்த்து பாஜக கடுப்பாகி விட்டது.. உடனடியாக தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததுடன், இது தொடர்பாக கேள்வியும் எழுப்பியது.
மாநில தலைவர் அண்ணாமலை, 'தமிழக அரசு விளம்பர அரசாக செயல்படுவதால், ஒருவரை மட்டும் விளம்பரப்படுத்தி கொள்கிறது.. செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் போட்டோகூட அதில் இல்லை.. பிரதமரின் போட்டாவும் இல்லையே ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதுபோலவே, அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, "இது திமுக அரசின் மலிவான, தரம் தாழ்ந்த, வக்கிர மற்றும் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.. உலகமே போற்றும் பிரதமர் மோடிக்கு விளம்பரம் தேவையில்லை.. ஆனால், பொறுப்புள்ள முதல்வருக்கு, சர்வதேச அளவில் நடக்கும் விழாவில், பிரதமருக்கு மரியாதை தர வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லையே என்பது மக்களின் கருத்தாக உள்ளது.. இதுதான் திராவிட மாடலோ" என்று, நாராயணன் திருப்பதி காட்டமாக கேட்டிருந்தார்.

கசிந்த உருக்கம்
ஆனால், "அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும்" என்று வழக்கம்போல் தன் பாணியில் மென்மையாகவும், கனிவாகவும், தமிழிசை சவுந்தராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.. இப்படி பல தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், அதிருப்திக்கு ஆளான பாஜகவினரோ, ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில், அந்தந்த பேனர்களின் அளவுக்கேற்ப பிரதமர் மோடியின் போட்டோக்களை ஒட்டி வருகின்றனர்.

கலெக்டர் ஆபீஸ்
இப்படித்தான் சென்னை அடையாறு பகுதியிலும் பிரதமர் போட்டோவை ஒட்டினார்கள்.. ஆனால், அங்கு வந்த பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள், பிரதமர் மோடியின் போட்டோ மீது கருப்பு கலர் பெயிண்ட்டை அடித்துவிட்டனர்... இது குறித்த புகாரின் பேரில், 3 பேர் கைதாகியும் உள்ளனர்.. மதுரை கலெக்டர் ஆபீசில் இது தொடர்பாக மனு கொடுக்க போன இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திடீரென அவரே பிரதமர் போட்டோவை அந்த விளம்பரங்களில் ஒட்ட ஆரம்பித்து, பரபரப்பை கிளப்பினார்.

காரணம் இதுதான்
இதனிடையே, பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஒரு விளக்கம் தந்திருந்தார்.. "திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் தவறை உணர்த்தி திருத்திடும் விதமாகவும், தமிழர் பண்பாட்டை நிலைநாட்டிலும் வகையில் செஸ் ஒலிம்பிக் விளம்பரங்களில் பிரதமரின் போட்டோக்களை ஒட்டியுள்ளோம்" என்று கூறியிருந்தார்.

மா.சு. நச் விளக்கம்
இந்த போட்டோ விவகாரம், வெடித்தபோதே, ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் பிரதமர் மோடி இடம்பெறாதது ஏன் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் செய்தியாளர்கள் முன்னமேயே கேள்வி எழுப்பினார்கள்.. அதற்கு அவர், வீரர்களை வரவேற்பதற்கான பாடல் அதுபிரதமரை வரவேற்பதற்கான பாடல் அல்ல என்று மா.சு. விளக்கம் தந்திருந்தார்.. எனினும் இந்த பிரச்சனை ஓயவில்லை..

சரவணன் அண்ணாதுரை
இன்றைய தினம் அது கோர்ட் வரையும் சென்றுவிட்டது.. செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் போட்டோவை சேர்க்கக் கோரி மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது... இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருவதாக கோர்ட்டும் உறுதி தந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், திமுக தரப்பில் இது தொடர்பாக ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது.. திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

200 கோடி
அந்த ட்வீட்டில், ரஷ்யாவில் நடக்கவிருந்த செஸ் ஒலிம்பியாட், தொடர் போரினால் வேறு நாட்டில் நடத்த முடிவு செய்கிறது... அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசுடன் எடுத்த முயற்சிகளால் சென்னையில் நடக்கிறது. முதல்வர் முக ஸ்டாலின், கொடுத்த ஊக்கமே காரணம். 200 கோடிகள் செலவு தமிழனின் வரி, பிறகெதற்கு மற்றவரின் படம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

முறையா?
பிரதமர் போட்டோவை விளம்பரங்களில் இடம்பெறாதது, இணைய தளத்தில் விவாதங்களாகவே வெடித்து வருகிறது..."என்ன இருந்தாலும் அவர் நமக்கு பிரதமர்.. அவர்தான் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். அவர் படம் இடம்பெறுவதுதானே முறை?.. அவருக்கு கவுரவம் தந்தால், தமிழகத்துக்குதானே பெருமை?" என்று ஒருசாரார் சோஷியல் மீடியாவில் தங்கள் கருத்து சொல்லி வருகிறார்கள்..

சர்ட்டிபிகேட்கள்
மேலும் சிலரோ, தடுப்பூசி இலக்கு சாதனை சர்ட்டிபிகேட்டில், இவர் மட்டும்தான் தொற்று ஒழிப்புக்கு காரணம் என்பதுபோல, பிரதமர் போட்டோ இருந்தது.. அதுபோல, இங்கே செஸ் விளையாட்டு தமிழ் நாட்டில் நடப்பதால், மாநில முதல்வர் போட்டோ இருக்கிறது.. இந்த விழாவை தமிழகத்தில் நடத்த, ஆரம்பத்தில் இருந்தே ஓகே சொல்லி, ஒவ்வொன்றையும் நேரில் சென்று ஆலோசித்து வந்தவர் ஸ்டாலின்தானே.. அவர் நடத்தும் விழாவில் அவர் படம் இருப்பது தவறில்லையே என்றும் இன்னொரு சாரார் சொல்லி வருகிறார்கள்.. விழாவின் குதூகலம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த விளம்பர களேபர சர்ச்சை இணையத்தில் ஓயாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications