"திருமாவளவன்" தலைவராக காரணமே ராமதாஸ்தான்.. வடக்கே வன்னியர், தெற்கே தேவேந்திரர்: பாமக திலகபாமா அதிரடி

பாமகவின் திலகபாமா ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவை முன்னிலைப்படுத்தக்கூடாது என்பதற்காகவே சில சூழ்ச்சிகள் அரசியல் களத்தில் நடத்தப்படுவதாக, அக்கட்சியின் திலகபாமா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாமக என்றாலே சாதி ரீதியான அணி திரட்டல்கள் உண்டு என்ற பிம்பத்தையும் கட்டமைத்துவிட்டார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரியில் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாடு சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த மாநாட்டில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்திருந்தார்..
"வடக்கே வன்னியரும், தெற்கே தேவேந்திரரும் சேர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று பேசிய பாமக நிறுவனர் ராமதாஸின் அடையாளமாக இங்கு நான் நிற்கிறேன்.

 வடக்கு தெற்கு

வடக்கு தெற்கு

தேவேந்திர குல வேளாளர்கள் மறக்க முடியாத சம்பவம் கொடியங்குளம் கலவரம். காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்து ராமதாஸ் ஓடோடி வந்தார். இந்த மண்ணோடும், நீரோடும் தொடர்புடைய உறவுகளுக்காக ஓடி வந்தார். அன்புமணி ராமதாஸ் என்னை அழைத்து, புதிய தமிழகம் கட்சியின் பொன்விழா மாநாட்டுக்கு கிருஷ்ணசாமி அழைப்பு விடுத்திருக்கிறார், நான் டெல்லி செல்ல வேண்டி இருப்பதால் என்னால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது, நீங்கள் செல்லுங்கள், வன்னியரும், தேவேந்திரரும் இணைந்தால் தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதைச் சொல்லி வாருங்கள் என்று என்னை அனுப்பினார்" என்று பேசியிருந்தார்.

 படார் திலகபாமா

படார் திலகபாமா

இந்நிலையில், நம் ஒன் இந்தியா தமிழுக்காக, திலகபாமா ஒரு ஸ்பெஷல் பேட்டியை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் இதுகுறித்த கேள்வியை எழுப்பினோம்.. பாமக என்றாலே சாதி ரீதியான அணி திரட்டல்கள் உண்டு என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ள நிலையில், வன்னியர்களும் தேவேந்திர குல வேளாளர்களும் இணைந்தால் அரசியல் அதிகாரம் நிச்சயம் என்று நீங்கள் பேசியது, அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பது போல் ஆகாதா? என்ற கேள்வியையும் முன்வைத்தோம்.. அதற்கு பாமக பொருளாளரும் கவிஞருமான திலகபாமா நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை:

 கூசுது காது

கூசுது காது

"ஒவ்வொரு சாதியினரையும் அவரவர்களை வலுப்படுத்துவதற்காக அணி சேர்ப்பது என்பது எப்படி தவறாகும்? காலம் காலமாக சாதி பெயரை சொன்னாலே கூசக்கூடிய விஷயத்தை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.. அனைத்து சமுதாயத்தையும் அணி திரட்டல் என்பது இன்று தேவையாக இருக்கிறது.. இதை மருத்துவர் ஐயாவும் உறுதியாக நம்புகிறார்.. "வடக்கே வன்னியர்களும், தெற்கே தேவேந்திரர்களும்" என்று புதுசா நான் ஒன்றும் சொல்லிவிடவில்லை.., பல காலமாகவே சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம்தான். ஒவ்வொருவருக்கான வாழ்வியலை அரசியல் மூலம் அமைப்பதற்கு இந்த அணி திரட்டல் என்பது மிகவும் முக்கியம்..

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

ஆனால், இது எப்போது குற்றமாகும் என்றால், யாரையாவது ஒரு சாதியினரை குறைத்து மதிப்பிடும்போதுதான் அது குற்றமாகும்.. இங்கே அப்படி எதுவுமே இல்லை.. "உன்னுடைய எல்லாவற்றையும் நான் மதிக்கிறேன், உன்னுடைய ஆளுமையும் என்னுடைய ஆளுமையும் ஒன்றுசேர அறைகூவல் விடுக்க, பாமக தயாராக இருக்கிறது" என்பதே அதன் அர்த்தம்.. பாமகவை மட்டும்தான் சாதி ரீதியிலான கட்சியாக உருவகப்படுத்திட்டாங்க.. ஆனால், ஒரே சாதியில் மட்டும், உருவான இயக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.. அதேபோல திமுக, அதிமுகவும் தேர்தல் சமயங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் சாதீய ரீதியான தேர்வுகளை முன்வைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்..

 திருமா கல்யாணம்

திருமா கல்யாணம்

நான் சொல்லுவது, 2 பெரிய இயக்கங்களும் ஒன்றிணைந்து வாக்குகளாக அவைகளை மாற்றுவதற்காகத்தான்.. என்றைக்குமே, பாமக, எந்த இனக்குழுவுக்கும் எதிரானதாக இருந்தது இல்லை என்பதை காலம் சொல்லும்.. திருமாவளவனை, நீங்கள் தென்பகுதியில் இருக்காதீங்க, வடபகுதிக்கு வாருங்கள் என்று சொன்னவர் மருத்துவர் ஐயா.. ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என்று உரிமையுடன் கேட்கக்கூடியவர் மருத்துவர் ஐயா.. ஆனால், நாங்கள் முன்வைக்கும், இருபெரும் சமுதாயங்கள் ஒன்றுசேர்ந்து அரசியல் ஆளுமையாக மாறுவதை உடைப்பதற்கான வேலையை யார் செய்கிறார்கள் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்..

 இடியாப்ப சிக்கல்கள்

இடியாப்ப சிக்கல்கள்

நான் கேட்டுக்கொண்ட இரு இணைப்புக்கு எதிராக, தேவையில்லாமல் ஒரு பதற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.. மிகப்பெரிய இனக்குழுவாக இருக்கிறது தேவேந்திர சமுதாயம்.. சம்பந்தி என்று கூப்பிடுகிறார்கள்.. அவர்களின் பிரச்சனைகளை ஆழமாக தெரிந்து வைத்திருக்கிறார் மருத்துவர் ஐயா.. சிறுபான்மையினரின் சிக்கல்களை பேசுகிறோமே தவிர, பெரும்பான்மை சமூகத்தின் சிக்கல்களை இன்று யாராலும் உற்றுநோக்கப்படவேயில்லை.. பெரும்பான்மை சமூகத்தின் சிக்கல்களை பேச ஆரம்பித்தாலே, நீங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவரா? என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

 திருமாவளவன்

திருமாவளவன்

இதன்காரணமாகவே பெரும்பான்மை சமூகத்தின் சிக்கல்களை பேசுவதற்கும், தீர்ப்பதற்குமான ஆட்கள் உருவாகவேயில்லை.. எல்லாரையும் இணைப்பதற்கான முயற்சியை மருத்துவர் ஐயா எடுக்கும்போதெல்லாம், அதை உடைப்பதற்கான சூழ்ச்சி அரசியல் களத்திலே உருவாகிவிடுகிறது.. பாமகவை முன்னிலைப்படுத்தக்கூடாது என்பதற்காகவே இந்த சூழ்ச்சியை நடத்துகிறார்கள். அதனால்தான், வேறு வழியில்லாமல் வடக்கு மண்டலத்தையே கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகி விட்டது.. 10 வருடம் கழித்து ஒரு வாய்ப்பை திமுகவுக்கு தரலாமே என்று மக்கள் நினைத்தார்கள்.. ஆனால், அதன் பலனை இந்த கொஞ்ச காலத்திலேயே திமுக உணர்த்திவிட்டது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+