Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கூமுட்டை".. பழைய நினைப்புடா பேராண்டி.. ஓபிஎஸ்ஸிடம் "அவர்" வரப்போறாரு.. எடப்பாடிக்கு ஷாக் தந்த லீடர்

ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூடிய சீக்கிரம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பலரும் ஓபிஎஸ் பக்கம் வர உள்ளதாக, அதிமுக மூத்த தலைவர் மருது அழகுராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரு டிவி சேனலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளரும், சீனியர் தலைவருமான மருது அழகுராஜ் பேட்டி தந்துள்ளார்.. அப்போது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ததே தனது தலைமையிலான அரசுதான் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மருது அழகுராஜ் நீண்ட விளக்கத்தை தந்தார்.. அதன் சுருக்கம்தான் இது..: "கொடநாட்டு பங்களாவில், கடிகாரமும், கரடி பொம்மையும் திருடு போய்விட்டதா? கொடநாட்டில் சாயங்காலம் 6 மணிக்கு மேல போக முடியாது.. காலையில் 8 மணிக்கு மேலதான் கொடநாட்டில் இருந்து குன்னூருக்கே வர முடியும்.. அந்த அளவுக்கு பனி இருக்கும்.. சாலைகள் பனியால் மூடியிருக்கும்.

 SHOCK + டவுட்

SHOCK + டவுட்

கொலை, கொள்ளை அரங்கேற்றியவர்கள் ஒரு இரவில் சோதனை சாவடியில் சிக்கி விடும்போது, அவர்களை விடுவிக்க சொன்னது யார்? எங்கிருந்து உத்தரவு போனது? உள்துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி, ஏன் அன்று கொடநாட்டுக்கு செல்லவில்லை? ஒருவேளை அம்மா உயிருடன் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்திருந்தால்? எடப்பாடி வீட்டிலேயே இந்த கொலை, கொள்ளை நடந்திருந்தால்? இன்னும் எத்தனையோ ஆயிரம் சந்தேகங்கள் சேலம் இளங்கோவன் என்பவரை சுற்றி எழுப்பப்படுகிறது. இதற்கெல்லாம் விடை சொல்ல சொல்லுங்க.. என்னை மட்டும் ஐந்தரை மணி நேரம் விசாரித்தார்களே? நான் எடப்பாடியிடம் 4 கேள்வி மட்டும் கேட்கிறேன்.. வரசொல்லுங்க.

 சொக்கத் தங்கம்

சொக்கத் தங்கம்

ஊழலுக்கு வடிவானவர் எடப்பாடி பழனிசாமி.. உங்களை சுற்றி மர்மங்கள் அலையடிக்கிறது.. அதனால், பழிவாங்களை சுமக்கும் எடப்டி அதிமுகவுக்கு வருவதைவிட, பரிசுத்தமான தலைமை அதிமுகவுக்கு வரட்டும்.. செப்பு கலக்காத சுத்த தங்கமாக, பதறாத பண்பாளராக, பெரியகுளத்தில் பிறந்த பெரிய மனதுக்காரரான, அதிமுகவின் நலனுக்காக எதையும் விட்டுத்தர தயாராக இருந்தவருமான, ஓபிஎஸ் தலைமை தகுதிக்கு தகுதியானவர்.. தலைமை தகுதி இல்லாதவர் எடப்பாடி.. சுயநல வெறிபிடித்த மனநோயாளி.. அதிகாரம் தனக்கு வரவில்லையானால், அத்தனை பேரையும் அழித்துவிடுவேன், தன்னை ஏற்றுக்கொண்டால் இரு, இல்லாவிட்டால் வெளியேறு என்று சொல்பவர்..

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இப்படிப்பட்ட அகம்பாவம் பிடித்த மனிதரிடம் என்ன இருக்கிறது? எடப்பாடி அரசியல் வெல்லாது.. அதிமுக ஒற்றுமைக்கு பாஜக முயற்சி செய்ய வேண்டும் என்று வைத்திலிங்கம் சொன்னதில் தவறே கிடையாது.. ஏனென்றால், திமுகவின் நெடுநாள் கூட்டணியில் இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சி.. பல சமயங்களில் அவர்களுக்கு உறுதுணையாக திமுக இருந்துள்ளது.. ஒருமுறை, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க, காங்கிரஸ் கட்சியின் பிரதான கூட்டணிகளே தயங்கிய நேரத்தில், முதன்முதலில் அப்படி ஒரு அறிவிப்பை செய்தது திமுகதான்.. அதுபோல, பிரதான கூட்டணிக்கு பிரச்சனை என்றால், இன்னொரு கட்சி உதவுவதில் தவறில்லை.. இப்படி செய்வதால், பாஜகவின் ஆதாயமும், அதன் எதிர்காலமும் உள்ளது.

கூமுட்டை

கூமுட்டை

எடப்பாடிதான் பெரிய ஆளுமைக்காரர் என்கிறார்களே, அமித்ஷாவிடம் எதுக்கு இப்போ பஞ்சாயத்துக்கு போனார்? நதிநீர் இணைப்பு என்றால், நீர்வளத்துறை அமைச்சரைதானே சந்திக்க வேண்டும்? மனுவை எங்கே கொடுக்கணும்னு தெரியாதா? மடியில்தானே பால் கறக்க வேண்டும்? கொம்பிலா பால் கறக்க முடியும்? கோதாவரி, காவேரி என்பதெல்லாம் கோயபல்ஸ் பிரச்சாரம்.. எல்லாம் பொய்.. என்னையும் என் சம்பந்தியையும் காப்பாத்துங்க எஜமான் என்று டெல்லிக்கு ஓடினார்.. இவர் திறன் மிக்கவாராக இருந்தால், "பாஜகவால் எங்களை ஒன்றுமே செய்ய முடியாது" என்று வேலுமணி, தங்கமணியை விட்டு ஒரு அறிக்கை விடுக்க சொல்லுங்க பார்ப்போம்.

 ஈரம் + வீரம்

ஈரம் + வீரம்

வெளியே வீரமாக பேசிக்கொண்டு, உள்ளுக்குள் தொடை நடுங்கி கோழைதான் எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் ஏதாவது திட்டத்தை எதிர்த்து எடப்பாடியை பேட்டி தர சொல்லுங்க பார்ப்போம்.. திமுகவை எதிர்ப்பது போல கட்டிக் கொண்டாலும், திரைமறைவில் இரு கட்சிகளுக்கும் ஒப்பந்த நாடகம் உள்ளது.. முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் எடப்பாடி.. அவரிடம் வீரம் இல்லை, ஈரம் இல்லை, தியாகம் இல்லை, அரவணைப்பு இல்லை, அறிவு இல்லை.. பொது அறிவு இல்லை, பொதுவாகவே அறிவும் இல்லை, நான் பார்த்த வகையில் திராவிட இயக்கத்தில் கூமுட்டை தலைவனாகவே எடப்பாடியை பார்க்கிறேன்

 முளைத்த கட்சி

முளைத்த கட்சி

ஒரு கட்சி, ஒரு பிளவு இருக்கிறபோதே எதிர்க்கட்சியாகிவிட்டது.. ஓபிஎஸ் - இபிஎஸ் பிளவுக்கு நடுவில், ஒரு ஐபிஎஸ் முன்னே வர முயற்சித்து கொண்டிருக்கிறது.. இந்த இரண்டு பிளவும்தான் தன்னை வாழ வைக்கும் என்று எம்கேஎஸ் (ஸ்டாலின்) ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.. இப்படி இத்தனை கணக்குகள் இங்கே நடக்குது.. வெறும் அதிமுக, திமுக மட்டும் இங்கு இல்லை.. பல கட்சிகள் இப்போது விழித்து கொண்டுவிட்டது.. நாம் தமிழர் கட்சியில் ஒரு சித்தாந்தத்தை வைத்து கொண்டு, சீமான் போராடுகிறார்.. போட்டிகள் நிறைய முளைத்துவிட்டதால், கட்சியை எடப்பாடி பழனிசாமி பாதுகாக்க வேண்டும்தானே?

பேராண்டி

பேராண்டி

எடப்பாடி என்னவோ தன்னை எம்ஜிஆர், அம்மா போல நினைத்து கொண்டு, மொத்த கட்சிக்கும் தான் தலைவர் என்று நினைத்து கொண்டிருப்பது முட்டாள்தனம். பழைய நினைப்புடா பேராண்டி கதைதான்.. இதோ, திருச்சி மா.செ.துணை தலைவர் பத்மநாபன் வைத்திலிங்கத்திடம் இணைந்து விட்டார்.. இனி வரிசையாக வருவார்கள்.. அவர்கள் எல்லாம் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.. நவம்பர் 20 தீர்ப்புக்காக உள்ளனர்.. அங்கிருந்து கிளம்பிவர காரணம் ஒன்று சொல்ல வேண்டுமே, அதற்காக காத்துள்ளனர்.. எடப்பாடி சரிப்பட்டு வர மாட்டார் என்ற முடிவுக்கும் வந்துவிட்டனர்.. என் கணிப்பு, எடப்பாடியின் டிரைவர்கூட ஓபிஎஸ் பக்கம் வந்துடுவார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+