சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"செம ட்விஸ்ட்".. அதிர்ந்த எடப்பாடி.. அசராத ஓபிஎஸ்.. அனலடித்த வாதங்களை இன்று ஒப்படைக்க கோர்ட் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் முடிவடைந்தது.. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்... அத்துடன் இரு தரப்பு வாதங்களையும் இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வமாக ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் 2 வது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி ஜெயச்சந்திரன் 2வது நாளாக இந்த வழக்கை விசாரித்தார்.. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இரு தரப்பிலுமே வலுவான பாயிண்ட்கள் முன்வைக்கப்பட்டன.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு.. காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை! அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு.. காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

நோட்டீஸ்

நோட்டீஸ்

எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடும்போது, "அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிகள் காலாவதியாகவில்லை. ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் காலாவதியாகிவிட்டது. ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஜுன் 23ல் நடந்த பொதுக்குழுவின்போது அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு தொடர்பான நோட்டீசை தபால் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அவசியமில்லை. 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர்..

 தேர்தல் நடைமுறை

தேர்தல் நடைமுறை

ஒற்றைத்தலைமை தான் தேவை என ஜூன் 23 ம் தேதி நடந்த பொதுக்குழுவில் உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவு காரணமாக அன்று அதை நிறைவேற்ற முடியவில்லை.. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் 2021 டிசம்பரில் பதவிகள் காலாவதியாகிவிட்டன.. எனினும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் திருத்த விதிகளின்படியே நடத்தப்பட்டது..

லெட்டர்

லெட்டர்

ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்... எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு பிறகு, கட்சியை வழி நடத்த எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி கட்சியினர் கடிதம் அளித்துள்ளனர். அதிமுகவில் தான் உள்கட்சி தேர்தல் ஜனநாயக பூர்வமாக நடத்தப்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 வருடங்களாக இருக்கும்போது, ஒரு வருடத்துக்கு முன்பே காலாவதியானது எப்படி? பெரும்பான்மை உறுப்பினர்கள் பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனரா? என்று கேள்வி எழுப்பினார்.

 எடப்பாடி தரப்பு

எடப்பாடி தரப்பு

ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், 2017ம் ஆண்டு நியமனத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் எடப்பாடி தரப்பில் இதற்கு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.. 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக, கடிதம் வழங்கியுள்ளதாகவும் எடப்பாடி தரப்பு வாதிட்டது.

 எடப்பாடி ஷாக்

எடப்பாடி ஷாக்

ஆனால், பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது... தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக முன்மொழியும்போது, எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் என்று தான் குறிப்பிடப்பட்டதாகவும், இதிலிருந்தே பதவிகள் காலாவதியாகவில்லை என்பது உறுதியாவதாகவும் ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.

வாதங்கள்

வாதங்கள்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் , தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.. அத்துடன், 2 தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமாக தங்கள் வாதங்களை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். கடந்த 2 நாட்களாக நடந்த வாதங்களை பொறுத்தவரை, எடப்பாடி பழனிசாமிக்கு சற்று சறுக்கல் என்றே சொல்கிறார்கள்..

Recommended Video

    அதிமுக பொதுக்குழு தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
     ட்விஸ்ட்கள்

    ட்விஸ்ட்கள்

    நீதிமன்றம் கேட்ட கேள்விகள் அனைத்தும் சரியானதே என்றாலும், "கட்சிப் பொதுக்குழுவை கூட்டியதில் விதிகள் பின்பற்றப்படவில்லையென்றால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தது, எடப்பாடிக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.. அதேசமயம், நீதிமன்ற நடவடிக்கைகள் ஓபிஎஸ் தரப்புக்கு ஓரளவு நிம்மதியும், ஆறுதலையும் தந்து வருகிறதாம்.. எனுனம், இன்றைய தினம் இவர்கள் 2 பேரும் தாக்கல் செய்ய போகும் எழுத்துப்பூர்வமான வாதங்களையடுத்து, தீர்ப்பின் தேதி எந்நேரமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Are the Edappadi Palaniswami team dissatisfied and Both sides have to submit their arguments in writing to the court today எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தங்கள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X