சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சுப்ரீம் பவர்".. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக திரும்பிய ஒற்றை பாயிண்ட்.. தீர்ப்பையே புரட்டி போட்ட எடப்பாடி!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கியமான சில வாதங்களை வைத்தது. ஆனால் அந்த வாதங்கள் எதுவும் அவருக்கு பலன் அளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கியமான வாதம் ஒன்று ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக திரும்பி உள்ளது.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது . உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லாது என்று கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் இரண்டு நீதிபதி இன்று தீர்ப்பு வழங்குகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் தீர்ப்பு வழங்குகின்றனர்.

இந்த வழக்கில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

கேம் ஓவர்? அதிமுக பொதுக்குழு வழக்கில் யாருக்கு வெற்றி? ஓபிஎஸ் vs எடப்பாடி.. இன்று ஹைகோர்ட் தீர்ப்பு!கேம் ஓவர்? அதிமுக பொதுக்குழு வழக்கில் யாருக்கு வெற்றி? ஓபிஎஸ் vs எடப்பாடி.. இன்று ஹைகோர்ட் தீர்ப்பு!

விசாரணை

விசாரணை

எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று மூன்று மணி நேரம் வாதம் வைத்தது. அதன்பின் ஓ பன்னீர்செல்வம் தரப்பு சுமார் 2 மணி நேரம் வாதம் வைத்தது. இதில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த சில முக்கியமான வாதங்கள் பின்வருமாறு.

வாதம் 1 - அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போதே தொண்டர்களுக்குத்தான் அதிக பவர் கொடுத்தார். தொண்டர்கள் தலைவர்களை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான்.

வாதம் 2 - தொண்டர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் அதிமுகவில் உட்கட்சி தேர்தல் வைக்கிறோம். தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்தான் எம்ஜிஆர். எம்ஜிஆர் கட்சி தொடங்கியது அதை மையப்படுத்திதான்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

வாதம் 3- அதன்பின் ஜெயலலிதா இதை பின்பற்றினார். அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தது. அவரை எதிர்த்து அதன்பின் யாரும் போட்டியிடவில்லை என்றாலும் அவர் இந்த முறையை மாற்றவில்லை.

வாதம் 4 - ஜெயலலிதா தொண்டர்கள் மூலம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரும் போட்டியின்றி தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

முக்கிய வாதம்

முக்கிய வாதம்

வாதம் 5 - ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டதால் அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்து செய்ய முடியாது. அதற்கு வழியேஇல்லை .

வாதம் 6 - நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது பொதுக்குழு விதி. ஆனால் அப்படி செய்யலாம் பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். இது சட்டப்படி தவறு.

சுப்ரீம் பவர்

சுப்ரீம் பவர்

வாதம் 7 - பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட முடியும். சம்பந்தமே இன்றி தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்ட முடியாது.

வாதம் 8 - கட்சியில் தொண்டர்களுக்கே சுப்ரீம் பவர் இருக்கிறது. அவர்களுக்கே முடிவு எடுக்கும் சுப்ரீம் அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவிற்கு இல்லை, என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தனது வாதத்தில் வைத்துள்ளது.

பயனில்லை

பயனில்லை

ஆனால் ஓ பன்னீர்செல்வம் வைத்த இந்த வாதங்கள் எதுவும் அவருக்கு பலன் அளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கியமான வாதம் ஒன்று ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக திரும்பி உள்ளது. எடப்பாடி வைத்த வாதத்தில், மனுதாரர்கள் தரப்பில் கோரப்படாத நிவாரணம் வழங்கியது அசாதாரணமானது. கோரப்படாத ஒரு கோரிக்கையை உயர் நீதிமன்றம் எப்படி நிறைவேற்ற முடியும், என்று எடப்பாடி வாதம் வைத்தார். அதாவது ஓபிஎஸ் வைக்காத கோரிக்கைக்கு தனி நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார் என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது.

திருப்பம்

திருப்பம்

மேலும் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது., என்று எடப்பாடி வாதம் வைத்தார். இந்த வாதம்தான் வழக்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தனி நீதிபதியின் தீர்ப்பை இன்று ரத்து செய்த இரட்டை நீதிபதிகள், பெரும்பான்மையான உறுப்பினர்களின் எண்ணத்தை தனி நீதிபதி கவனிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதாவது , பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கு இருப்பதை தனி நீதிபதி கவனிக்கவில்லை என்று இரட்டை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது., என்று எடப்பாடி வாதம் வைத்தார். இந்த வாதம்தான் வழக்கில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தனி நீதிபதியின் தீர்ப்பை இன்று ரத்து செய்த இரட்டை நீதிபதிகள், பெரும்பான்மையான உறுப்பினர்களின் எண்ணத்தை தனி நீதிபதி கவனிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதாவது , பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கு இருப்பதை தனி நீதிபதி கவனிக்கவில்லை என்று இரட்டை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்/

English summary
Are these the points said by O Panneerselvam is against in AIADMK general council case? Are these the points said by O Panneerselvam is against in AIADMK general council case? அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கியமான சில வாதங்களை வைத்தது. அவர் வைத்த வாதங்கள் இன்று தீர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X