சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கு பறந்து வரும் "பட்டம்".. ஒவைசி கட்சிக்கு தனிச்சின்னம்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு தேர்தல் ஆணையம் பட்டம் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.

2021 சட்டசபை தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய காட்சிகள் பெரிய கூட்டணியை அமைக்க முயன்று வருகிறது. அதிமுக - பாமக இடையே டீலிங் முடிந்த நிலையில் தற்போது அதிமுக, பாஜக, தேமுதிக இடையே ஆலோசனை நடந்து வருகிறது.

இன்னொரு பக்கம் திமுகவும் காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. அதிமுக, திமுக போக தமிழகத்தில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கேம் சேஞ்சராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள அசாதுதீன் ஒவைசி மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசி

அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தேசிய அளவில் தற்போது கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து லோக்சபா எம்பியாக இவர் தற்போது உள்ளார். இவரின் ஏ.ஐ.எம்.ஐ.எம். நாடு முழுக்க வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக பீகார் சட்டசபை தேர்தலில் இவரின் கட்சி 5 இடங்களில் பெற்ற வெற்றி நாடு முழுக்க இவரை திரும்பி பார்க்க வைத்தது. இஸ்லாமியர்களின் வாக்கு இவருக்கு அதிகம் விழுவதால் மிக முக்கியமான கட்சியாக அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி உருவெடுத்து வருகிறது.

வாக்குகள் பிரிப்பு

வாக்குகள் பிரிப்பு

பீகார் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைய இவர் வாக்கை பிரித்ததுதான் காரணம் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் நடக்க உள்ள சட்டசபை தேர்தல்களில் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிட உள்ளது. இதற்காக அந்த கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது.

பட்டம்

பட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு தேர்தல் ஆணையம் பட்டம் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. மேற்கு வங்கத்திலும் இதே சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் உருது பேசும் இஸ்லாமியர்களின் ஆதரவு இவருக்கு உள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இவர்களை வாக்குகளை ஒவைசி வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன் 2016 சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, வாணியம்பாடியில் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். போட்டியிட்டு தோல்வி அடைந்தது. ஆனால் தற்போது ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி புதிய எழுச்சி பெற்று இருப்பதால் இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ளது.

English summary
Asaduddin Owaisi's AIMIM party gets Kite symbol for Tamilnadu and WB state assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X