சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தள்ளு தள்ளு.. கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவத்தை பார்த்து இருக்கவே மாட்டீங்க.. செம அதிர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் பெண்கள் பிரிவு ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான வங்கதேசம் அணி வெளியேறிவிட்டது.

தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி உள்ளது. கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் தாய்லாந்து அணி ஆசிய கோப்பை செமி பைனல் தொடருக்குள் நுழைந்து உள்ளது.

அப்பாவியாக கேட்கிறேன்.. ஆசிய கோப்பையில் கிரிக்கெட் “சூதாட்டமா”? - சுப்ரமணியன் சாமி ட்வீட்டால் பரபர அப்பாவியாக கேட்கிறேன்.. ஆசிய கோப்பையில் கிரிக்கெட் “சூதாட்டமா”? - சுப்ரமணியன் சாமி ட்வீட்டால் பரபர

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

இந்த தொடரில் மிகவும் மோசமாக ஆடும் அணி என்றால் அது மலேசியா அணிதான். இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே அந்த அணி மோசமாக சொதப்பி வருகிறது. இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் அந்த அணி தோல்வி அடைந்துவிட்டது. 5 போட்டிகளில் ஆடிய அந்த அணி அனைத்திலும் வரிசையாக தோல்வி அடைந்தது. கடைசியாக தாய்லாந்து அணிக்கு எதிராக அந்த அணி ஆடியது.

மலேசிய அணி

மலேசிய அணி

அந்த போட்டியிலும் தாய்லாந்து அணியிடம் மலேசியா அணி தோல்வி அடைந்தது. மலேசியாவிற்கு எதிராக அந்த போட்டியில் தாய்லாந்து அணி 115 ரன்களை 20 ஓவரில் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மலேசிய அணி தொடக்கத்தில் இருந்தே திணறி வந்தது. 60 ரன்களை கடப்பதற்குள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசியில் ஒருவழியாக 75 ரன்களை அந்த அணி எடுத்து தோல்வி அடைந்தது.

பெண்கள் போட்டி

பெண்கள் போட்டி

இந்த போட்டியில் தாய்லாந்து பவுலிங் முதல் ஓவரில் இருந்தே சிறப்பாக இருந்தது. இந்த தொடர் முழுக்கவே தாய்லாந்து அணியின் பவுலிங் நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த மேட்சில் அதிகம் கவனம் பெற்றது தாய்லாந்து பவுலிங் என்பதை விட மலேசிய அணியின் பீல்டிங்தான். முழுக்க முழுக்க காமெடியாக, அடுத்தடுத்து கேட்சுகளை விட்டு மலேசிய வீராங்கனைகள் சிரிப்பு காட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது நடந்த சம்பவம் ஒன்றுதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

பவுண்டரி

பவுண்டரி

மலேசிய அணி வீராங்கனை அரியானா 15வது ஓவரை வீசிக்கொண்டு இருந்தார். அப்போது தாய்லாந்து வீராங்கனை கோன்சரஏங்கி என்பவர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அந்த ஓவரில் 4வது பந்தை டீப் மிட் விக்கெட் திசையை நோக்கி கோன்சரஏங்கி அடித்தார். பவுண்டரி செல்ல வேண்டிய இந்த பந்தை மலேசிய வீராங்கனை கஷ்டப்பட்டு தடுத்தார். பவுண்டரி லைனுக்குள் சென்று கஷ்டப்பட்டு தடுத்தார்.


வந்த வேகத்தில் பவுண்டரி லைனை கடந்து அவர் சென்றார். பந்து மட்டும் மெதுவாக பவுண்டரி லைனை நோக்கி வந்தது. ஆனால் பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்த அந்த வீராங்கனை முட்டாள்தனமாக கையை வைத்து பந்தை தள்ளி விட்டார். அதாவது லைனுக்கு இந்த பக்கம் இருந்து கொண்டு அந்த பக்கம் இருந்த பந்தை அவர் தள்ளி விட்டார். இது அப்படியே வீடியோவில் பதிவானது.

வீடியோ

வீடியோ

அந்த பந்தை எடுக்க வேறு ஒரு வீராங்கனை அங்கு ஓடி வந்தார். இருந்தும் கூட பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்த அந்த வீராங்கனை முட்டாள்தனமாக கையை வைத்து பந்தை தள்ளி விட்டார். இதனால் அவர் பவுண்டரியை கஷ்டப்பட்டு தடுத்தது எல்லாம் வீணானது. தான் செய்தது தவறு என்று கூட தெரியாமல் அந்த பெண் நடந்து கொண்ட விதம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர் .

English summary
Asia Cup 2022: Malaysia woman player blender near the boundary rope creates discussion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X