Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காணாமல் போன‌ 'கை'.. அடுத்த தேர்தல்களிலாவது கரைசேருமா - காங்கிரஸ் செய்ய வேண்டியது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததுபோல் இல்லை. அதனால் காங்கிரஸ் கூடாரமே மிகுந்த சோகத்தில் இருக்கிறது.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தல் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் கசப்பான அனுபவமாகவே இருக்கிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இந்த 5 மாநில தேர்தலில், எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவில்லை. மாறாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது. மற்ற மாநிலத்தில் போட்டி கொடுக்கும் அளவுக்குக் கூட காங்கிரஸ் கட்சி இல்லை என்பது தான் உண்மை. காங்கிரஸின் இந்த நிலமை கண்ட, அதன் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மக்களின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

நடந்துமுடிந்துள்ள இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் 117 தொகுதியில் 18 இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. கோவாவில் 11 இடத்திலும், மணிப்பூரில் 6 இடத்திலும், உத்தரகாண்டில் 18 இடத்திலும், உத்தரப்பிரதேசத்தில் 2 இடத்திலும் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி போட்டி கொடுத்து தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருக்கும் என நினைத்தது. ஆனால் அங்கும் காங்கிரஸ் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

காங்கிரஸ் கட்சி தோற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் பொதுவாக சொல்லப்படுகிறது. அதில் முதலாவது சரியான தலைமை இல்லாதது, இரண்டாவது காங்கிரஸ் கட்சியில் இருக்கும் உட்கட்சி பூசல், மூன்றாவது முறையான யுத்தியோடு பிரசாரம் செய்யாமல் இருப்பது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்த காரணங்களோடு, மாநில காங்கிரஸின் அனுகுமுறையும் சேர்ந்து தான் தேர்தலில் எதிரொலித்திருக்கிறது.

தலைமை

தலைமை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த‌ சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால், 2017ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். புதுரத்தம் பாய்ந்ததாக காங்கிரஸ் கொண்டாடியது. அது அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார் ராகுல்காந்தி. உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளாவில் போட்டியிட்டார். அதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமைச்சர் ஒருவரிடம் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி.

சோனியா காந்தி

சோனியா காந்தி

ராகுல் காந்தியின் இமேஜை உடைத்ததில் மிக முக்கிய பங்கு பாஜகவுக்கு தான். அதுதான் அவர்களுக்கு அடுத்த வெற்றியைத் தேடித் தந்தது. பாஜகவின் யுத்தியை உடைக்கும் அளவுக்கு காங்கிரஸ் எந்த இடத்திலும் பிரசாரம் செய்யவில்லை. அதோடு ராகுல் காந்தியை 'பப்பு' என்று சொல்லி கேலி செய்து மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த பெயரை மாற்றியதும் பாஜக செய்த மிகமுக்கியமான விஷயம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொருப்பேற்றார்.

 பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்காத காரணத்தால், பிரியங்கா காந்தியை கொண்டுவரும் சூழல் உருவானது. காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் வந்தால் தான், கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும் என்று எண்ணி, பிரியங்கா காந்தியை அழைத்துவந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் பிரியங்கா காந்தி. இவரை அடுத்த இந்திரா காந்தி என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அழைக்கத் தொடங்கினர். பிரியங்காவும் உத்தரப்பிரதேசம் முழுவதும் சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் முகமாக இருந்தார் பிரியங்கா.

உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது உட்கட்சிப் பூசல் தான். பஞ்சாப் மாநிலத்தில் அமரிந்தர் சிங் நீக்கப்பட்டதும், சித்து அடுத்த முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டார். ஒருதலித் முதல்வர் என்று காங்கிரஸ் கொண்டாடியது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவை பெரும்பாலான சீக்கியர்கள் விரும்பவில்லை. அமரிந்தர் சிங் வெளியே போனது, அடுத்த முதல்வர் வேட்பாளராக சித்து அறிவிக்கப்படாதது என கட்சிக்குள்ளேயே விரிசல் அதிகமானது. கட்சியினரை அனுசரித்து போகும் தலைமை இல்லாததே பஞ்சாப் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிரசார யுத்தி

பிரசார யுத்தி

சமூக வலைதளங்களில் பாஜக இன்று அசுர வளர்ச்சி கண்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் பிரசாரம் இன்று வேகமாக வளர்ந்துள்ளது. அதற்கு முழுமையாக காங்கிரஸ் கட்சி மாறவில்லை. மக்களைக் கவரும் தலைவர்கள் குறைந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் ஸ்டார் தலைவர்கள் பெரிய பிரசாரங்கள் செய்யாததும் தோல்விக்கு காரணம். யாருடன் போட்டி போடுகிறோமோ, அவர்கள் செய்யும் பிரசாரத்துக்கு ஈடு கொடுக்க வேண்டும். விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி, வேலைவாய்ப்பு, லக்கிம்பூர், பாதுகாப்பு என பாஜகவை தாக்கிப்பேச பல விஷயங்கள் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி மேலோட்டமாகவே எல்லாவற்றையும் பிரசாரத்தில் பேசியது. மக்களிடம் எடுத்துச் செல்வதில் காங்கிரஸ் கோட்டைவிட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

2019 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தாங்கள் பெற்ற தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது எதையுமே காங்கிரஸ் செய்யவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவுகளும் காங்கிரஸ் எந்தவிதத்திலும் மாறவில்லை என்பதைத்தான் உணர்த்துகிறது. இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி இந்த மெத்தனபோக்கையே கடைபிடித்து வந்திருக்கிறது. பாஜகவினர் ஒவ்வொரு நாளையும் தங்கள் பிரசார நாளாக கருதி உழைத்ததுபோல், காங்கிரஸ் கட்சியும் சரி, தொண்டர்களும் சரி பாஜக மனநிலையில் பாதிகூட இல்லாமல் தான் பிரசாரத்துக்கே போயிருக்கிறார்கள். இப்போதே 'கை' கொஞ்சம் கொஞ்சமாக‌ காணாமல் போய்கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த தேர்தலில் மொத்தமாகவே காணாமல் போய்விடும் அபாயத்தில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அவர்களை ரட்சிக்க யாரும் வரமாட்டார்கள், இதுவரை அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு எதிர்நீச்சல் போட்டால் தான் கரைகாண முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+