தற்கொலைகளை தடுக்க.. எலி பேஸ்ட், சாணி பவுடர் விற்க தடை விதிக்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தவறான முடிவு எடுப்பவர்கள் எலி பேஸ்ட், சாணி பவுடர்களை தான் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்த அவர், விரைவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்றும் இதில் பலர் எலி பேஸ்ட் மற்றும் சாணி பவுடர் பயன்படுத்தி தற்கொலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எலி பேஸ்ட்
எலி பேஸ்ட் சாப்பிட்டால், அந்த பேஸ்ட் குடலில் ஒட்டிக்கொண்டு, ரத்தத்தில் கலப்பதால், கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து, ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய்விடுகிறது. ரத்தம் உறையாமை நிலை ஏற்படுவதால், மூளை மற்றும் நுரையீரலில், உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிய ஆரம்பித்து இறந்து விடுகின்றனர்.

சாணி பவுடர்
முந்தைய காலத்தில் வீட்டிற்கு முன்பு சாணி மொழுகுவது என்பது சுகாதாரமான மற்றும் விஷ கிருமிகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்கும் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால், தற்போது வணிகரீதியில் சாணி பவுடர் விஷமாக மாறியுள்ளது. இந்த சாணி பவுடரில் அபாயகரமான ரசாயணப் பொருட்கள் உள்ளன. இதனை கலந்து குடித்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் தற்கொலைகள்
இதனையடுத்து சாணி பவுடர் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டே அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார். தமிழ்நாட்டில் தற்கொலைகளினால் ஆண்டு ஒன்றுக்கு 15முதல்16 ஆயிரம் வரையிலான மரணங்கள் ஏற்படுகின்றன. விபத்துக்களினால் 11முதல்12 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்படுகின்றன. தற்கொலை மரணங்கள்தான் அதிகளவில் உள்ளது. அதில் 10-15 சதவிகிதத்தினர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொள்கின்றனர். மற்றவர்கள் எல்லாம் சாணி பவுடர், பால் டாயில், எலி மருந்து ஆகியவற்றை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று கூறினார்.

விற்பனைக்கு தடை
இந்த நிலையில் எலிபேஸ்ட், சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று மீண்டும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட 29 துணை சுகாதார நிலையம் உட்பட புதிய கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி வளாகப் பகுதியில் துவக்கி வைத்தார்.

டிஸ்ப்ளே செய்யாதீர்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தவறான முடிவு எடுப்பவர்கள் எலி பேஸ்ட், சாணி பவுடர்களை தான் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்த அவர், விரைவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், விற்பனை செய்யும் கடைகளில் இதை டிஸ்ப்ளே செய்யக்கூடாது. தனி நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. கூட்டாக வந்தால் தான் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications