‛ஒரேபோடு’.. பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம்.. பின்னணி இதுதான்.. கொதித்த குஷ்பு.. பரபர ட்விட்
சென்னை: 2022ல் குஜராத்தில் நடந்த கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புப்படுத்தி பிபிசி சார்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆவணப்படத்தை நீக்க வேண்டும் என யூடியூப் மற்றும் ட்விட்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கோத்ரா விவகாரத்தில் உச்சநீதிமன்றமே பிரதமர் மோடிக்கு க்ளீன்சீட் கொடுத்துள்ள நிலையில் இந்த ஆவணப்படம் வெளியாகி இருப்பதற்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பிபிசியையும், எதிர்க்கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதோடு, பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி 2 பகுதிகளாக ஆவணப்படங்களை தயாரித்துள்ளது. இதில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
‛‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்" என்ற தலைப்பில் வெளியான இந்த ஆவண படம் பல்வேறு வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரிட்டன் வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலரும் இந்த ஆவண படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல தளங்களில் இருந்து ஆவணப்படங்கள் நீக்கப்பட்டன.

மத்திய அரசு உத்தரவு
மேலும் மத்திய அரசு சார்பில் அந்த ஆவண படத்துக்கு தடை விதித்துள்ளது. அதோடு மத்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‛‛இந்தியாவுக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பாரபட்சம், காலனியாதிக்க மனப்பான்மை வெளிப்படுகிறது. இது கண்ணியமானது இல்லை'' என சாடியிருந்தார். இதற்கிடையே ட்விட்டர், யூடியூப்பில் உள்ள ஆவணப்படங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நடிகை குஷ்பு விளாசல்
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவினர் பிபிசி நிறுவனத்தையும், எதிர்க்கட்சியினரையும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். தற்போது இது பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவில் செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பிபிசி ஆவணப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

நீதிமன்றம் வழங்கிய ‛க்ளீன்சீட்’
நீங்கள் உண்மையை பேச துணிவில்லாமல் இருந்தால் பொய்யையும், நாடகத்தையும் நம்பியிருப்பதாக அர்த்தம். இவை இரண்டின் கலவையாக தான் நமது பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம். நாட்டை வழிநடத்த என்ன செய்ய வேண்டும் என்பதை உலகுக்கு காட்டிய அவரை உலகமே பாராட்டி வருகிறது. கோத்ரா விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தம் க்ளீன்சீட் வழங்கி இருக்கும்போது பிபிசி இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு என்ன காரணம்?. பிரதமர் மோடியை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் இது செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூட இந்த ஆவணப்படத்தை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார். உலகின் மற்ற தலைவர்களக்கும், கற்றறிந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

துரதிர்ஷ்டவசமானது
இந்த ஆவணப்படத்தின் பொய்களையும், பிரதமரை இழிவுப்படுத்துவதன் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள எதிர்க்கட்சிகள் அற்ப இன்பம் பெறுவதை பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த நாட்டின் தலைவராக உள்ளார். அவரது தலைமையில் இந்தியா அபார வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் கொண்ட வந்த ஒவ்வொரு திட்டமும், கொள்கையும் இந்தியர்களுகானது. ஒவ்வொரு இந்தியனும் மதத்துக்கு அப்பாற்பட்டு பாஜகவின் கீழ் எந்த வேறுபாடும் இன்றி நன்றாக நடத்தப்பட்டு வருகிறது.

அசைக்கவே முடியாது
பிரதமர் மோடியின் பலம் என்பது சிலரை உறுத்துகிறது. இதனால் இப்படி செய்கிறார். ஆனால் அவர்கள் முடிந்தவரை முயற்சி செய்யப்பட்டும். பிரதமரையும், அவரது தலைமையையும் நம்பும் மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் அசைக்கவே முடியாது. மோடி தொடர்ந்து இந்தியாவை வழிநடத்துவார். அவரது தலைமையில் இந்தியா உள்கட்டமைப்பு, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் சிறந்த தேசம் என்பதை உலக நாடுகள் பார்க்கும்'' என தெரிவித்துள்ளார்.

மோடிக்கு ஆதரவாக ரிஷி சுனக்
முன்னதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படம் குறித்து பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட எம்பி இம்ரான் உசைன் இந்த கேள்வியை எழுப்பினார். இதற்கு ரிஷி சுனக், ‛‛குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தபகுதியில் அநீதி நடந்தாலும் அதை தட்டிக் கேட்போம். ஆனால் மரியாதைக்குரிய ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. இதனை நான் ஒப்புக்கொள்ளவில்லை'' என்றார். இதன்மூலம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக ரிஷி சுனக் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications