சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஓவர் ஓவர்".. ஸ்கெட்ச் போடும் பாஜக.. வேற ரூட் எடுக்கும் ஆசாத்.. அஸ்திவாரமே ஆட்டம் காணும் காங்கிரஸ்?

குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிக்க என்ன காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் பரபரப்புகள் தமிழகத்தை கவ்வி கொண்டிருக்க, காங்கிரஸ் கட்சியிலும் விறுவிறுப்புகள் கூடி உள்ளன.. 2 முக்கிய தகவல்கள் வெளிவந்து, தொண்டர்களை நிமிர வைத்துள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு கிட்டத்தட்ட 3 வருடமாக தலைவர் என்று யாருமே இல்லை.. ஒரு தேசிய கட்சி, தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது பெருத்த பலவீனமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

சோனியா காந்திக்கு உடம்பு சரியில்லாத நிலையில், தற்காலிக தலைவராக தற்போது இருந்தாலும்கூட, ராகுல் காந்தியும் பொறுப்பேற்க முன்வராத நிலையில், காங்கிரஸ் தள்ளாடி கொண்டிருக்கிறது...

காங்கிரஸை நம்பினால் கடைசிவரை எதுவுமே கிடைக்காது என்று உறுதியாக நம்பியதால்தான், அன்று கபில் சிபல் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க காரணமாக இருந்துவிட்டது என்பதையும் நாம் மறுக்க முடியாது.

மோசமாகும் காங்கிரஸ் நிலைமை.. குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேர் விலகல் மோசமாகும் காங்கிரஸ் நிலைமை.. குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் உட்பட 5 பேர் விலகல்

 கபில் சிபல்

கபில் சிபல்

கபில்சிபல் என்றில்லை.. சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங் போன்ற முக்கிய தலைவர்களும் இப்படித்தான் விலகினார்கள்.. இவர்கள் எல்லாருமே சீனியர்கள்.. இவர்களே விலகி சென்றது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.. ஆனால், அப்போதுகூட, காங்கிரஸ் தன்னை மாற்றியோ, திருத்தியும் கொள்ளாமல் இருந்து வருகிறது. அதுமட்டுமல்ல, விரைவில் எம்பி தேர்தல் வர போகிறது.. அதற்கு மத்திய பாஜக இப்போத ரெடியாகிவிட்டது.. ஆனால், காங்கிரஸோ, தன்னுடைய கட்சியில் பெருகி உள்ள ஓட்டைகளை அடைக்க முடியாமல், சிக்கி திணறி வருகிறது.

 மாஸ்டர் ஸ்ட்டிரோக்

மாஸ்டர் ஸ்ட்டிரோக்

போதாக்குறைக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் தலைநகரத்தின் வீதியில் இறங்கி போராடினார்கள்.. ஒரு செகண்ட் நிமிர்ந்தெழுந்த காங்கிரஸ், அந்த போராட்டத்துக்கு பிறகு மறுபடியும் தலைமறைவாகிவிட்டது.. இந்த கட்சியில் கடைசித் தொண்டன் இருக்கும் வரை, கோஷ்ப்பூசல் இப்படியே இருந்துகொண்டுதான் இருக்கும் என்ற வரலாற்று விமர்சனமும் இன்று மேலும் வலுப்பெற்று விட்டது.. காங்கிரஸ் தலைமை நியமிக்கப்படாமல் உள்ளதுதான் இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக சொல்லப்பட்டு வரும்நிலையில், அடுத்தடுத்த திருப்பங்களும் அந்த கட்சியில் நடந்து வருகிறது.

 தூள் தூளாகும் கணக்கு

தூள் தூளாகும் கணக்கு

நேற்றைய தினம், அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகி உள்ளார்.. குழந்தைத்தனமாக இருக்கும் ராகுல், மூத்த தலைவர்களுடன் ஆலோசனைகளை நடத்துவதில்லை என்பன உட்பட மிக மிக கடுமையாக விமர்சித்து, சோனியாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.. ஆனால், கட்சிக்கு ஆசாத் துரோகம் செய்துவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.. இந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்ததுபோல, பாஜக ஆசாத்துக்கு அழைப்பு விடுத்தது.. ஆனால், அதை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்த ஆசாத், தனிக்கட்சி துவங்க போவதாகவும் கூறியுள்ளார்.

 அப்செட்

அப்செட்

இதற்கு என்ன காரணம்? வழக்கமாக, இதுபோன்ற தேசிய கட்சியில் இருந்து யாராவது விலகினால், இன்னொரு தேசிய கட்சி அழைப்பு விடுத்து அரவணைத்து கொள்வது இயல்பு.. ஆனால், ஆசாத் அப்படி செய்யவில்லை.. காங்கிரஸில் இருந்தபோதே அவருக்கு உரிய முக்கியத்துவத்தை மேலிடம் வழங்காமல் இருந்து வந்தது.. எம்பி பதவிக்கும் அவரை பரிந்துரைக்கவில்லை, ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்குகூட, அவரை சோனியா பரிந்துரைக்கவில்லை.. பல விஷயங்களில் அமைதி காத்த ஆசாத், இந்த ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில்தான், அப்செட் ஆகிவிட்டார். அது இன்று கட்சியில் இருந்து விலகும் அளவுக்கு போய்விட்டது.

 ஆசாத் அட்டாக்

ஆசாத் அட்டாக்

அதுமட்டுமல்ல, அவர் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கட்சி மேலிடம் காரணம் சொல்கிறது.. இந்த காரணம் ஏற்புடையது இல்லை என்றாலும், சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த ஆசாத்துக்கு ஏராளமான ஆதரவாளர்கள் அவரை சுற்றி உள்ளனர்.. பாஜக பக்கம், ஆசாத் சேர நேர்ந்தால், இந்த ஆதரவாளர்களின் ஆதரவை ஆசாத் பெரும்பான்மையாக இழக்க நேரிடும்.. அதனாலேயே தனிக்கட்சியை துவங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

 பஞ்சாப்

பஞ்சாப்

அப்படி தனிக்கட்சி துவங்கினால், பாஜகவுடன் கூட்டணி வைக்க எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கலாம்.. இப்படித்தான் பஞ்சாபில் அமரிந்தர் சிங் செய்தார். ராஜினாமா செய்ததுமே, அவர் அமித்ஷாவை 2, 3முறை டெல்லிக்கு சென்று நேரடியாக சந்தித்ததும் பாஜகவில்தான் இணைய போகிறார் என்று சலசலக்கப்பட்டது.. ஆனால், அமரிந்தர், தனிக்கட்சி ஆரம்பித்து, தேர்தல் சமயத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.. ஒருவேளை இதுபோல ஆசாத் முடிவெடுக்கலாமே தவிர, பாஜகவுடன் இணைய வாய்ப்பில்லை என்பது மட்டும் தற்போது தெரிகிறது...

 அடிவேர்கள்

அடிவேர்கள்

கட்சியின் அடிவேர்களையே ஒவ்வொன்றாக காங்கிரஸ் இழந்து கொண்டிருப்பது, பெருத்த பின்னடைவாக பார்க்கப்பட்டுள்ளது.. இமாச்சல சட்டப்பேரவை தேர்தலை, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலில் மட்டுமில்லை, வரப்போகும் 2024 எம்பி தேர்தலிலும் இந்த பாதிப்பின் தாக்கம் நிச்சயம் எதிரொலிக்கக்கூடும்.. அதேசமயம், இதுபோன்ற காங்கிரஸின் அடுத்தடுத்த பலவீனங்களில், பாஜகவின் எழுச்சி பளிச்சென மேலும் மிளிரவே செய்யும்..!

English summary
Big Chance to Ghulam nabi azad and What is the reason for announcing that a separate party will be launched குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிக்க என்ன காரணம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X