உதயநிதி அண்ணா.. பாஜகவிலிருந்து பாசமாக வாழ்த்து! அலிஷா அப்துல்லா போட்ட ட்வீட் -ஆனாலும் ஒரு வருத்தம்பா
சென்னை: தமிழ்நாடு அமைச்சராக இன்று பதவியேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என 2021 முதல் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில்தான் ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாட்டின் அமைச்சராக்க சம்மதம் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஏற்றார். இதனை தொடர்ந்து இன்று காலை 9:30 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது.

பதவியேற்பு விழா
அதில் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்தி வைத்தார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கருணாநிதியின் குடும்பத்தினர் என பலர் கலந்துகொண்டார்கள்.

விளையாட்டுத்துறை
இதனை தொடர்ந்து பலரும் எதிர்பார்த்ததை போன்றே உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தன் மீது வைத்து இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

உதயநிதி அறிக்கை
அதில், "தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. முதலமைச்சர் அவர்கள் தனது அமைச்சரவையில் எனக்கு இடமளித்து, கடமையாற்றப் பணித்துள்ளார்.

விமர்சனக் கணைகள்
இந்தப் பொறுப்பையும் நான் சவாலாக எடுத்துக்கொண்டு என் பணியைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்வேன். இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். 'விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்' என்று அன்று பதிலளித்து இருந்தேன்.

கிடைத்த வாய்ப்பு
அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். இளைஞர் அணி பொறுப்புடன், கூடுதலாகச் சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பினையும் கழகத் தலைவர் அவர்கள் அளித்தார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முன் மாதிரி தொகுதியாக்க என்னாலான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

தாத்தாக்கள் இல்லை
பொதுமக்கள் - அரசு நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செல்ல அதிக பொறுமை தேவை. அந்த வகையில், தொகுதி மக்களின் பிரதிநிதியாக எனது அனுபவம் எனக்கான கடமையை உணர்த்தியுள்ளது. அமைச்சர் பொறுப்பேற்கும் இந்த நேரத்தில் என்னை உச்சிமுகர்ந்து வாழ்த்த முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் தாத்தாக்கள் அருகில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம்.

நம்பிக்கையை காப்பேன்
அவர்களின் மறுஉருவாக வாழும் நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு, கழக முன்னோடிகள் - கழக உடன்பிறப்புகள் - என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் இளைஞர் அணியினர் - தமிழ் மக்கள் ஆகியோரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் பணியைத் தொடர்வேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்

தலைவர்கள் வாழ்த்து
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆனால், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்று சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். விழாவில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பையும் அவர்கள் ஏற்கவில்லை.

பாஜகவிலிருந்து வாழ்த்து
இந்த நிலையில் பாஜக விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா உதயநிதிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "புதிதாக அமைச்சரான உதயநிதி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை நீங்கள் மேம்படுத்த வாழ்த்துகிறேன். நீங்கள் என்னை பிளாக் செய்துவிட்டதால் டேக் செய்ய முடியவில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications