அமைச்சராகிட்டீங்க! ஏதோ அரசாங்கமே நீங்கன்னு நினைக்காதீங்க.. எங்களிடம் சூப்பர் பவர் இருக்கு.. பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள்தான் அரசாங்கம் என நினைத்துவிடக் கூடாது. எங்களிடம் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு பெயர் அண்ணாமலை என பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உதயநிதி அவர்களே, நான் அமைச்சர் ஆயிட்டேன், நான் தான் அரசாங்கம்,
நான் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்து விடக்கூடாது.

எங்களிடம் அசைக்க முடியாத ஒரு சக்தி இருக்கிறது அதற்கு பெயர் தான் "அண்ணாமலை" என தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதன் ஒவ்வொரு அரசியல் மூவ்களையும் பாஜகவின் அண்ணாமலை விமர்சித்த வண்ணம் உள்ளார்.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சியாக அதிமுக உள்ள நிலையில் அதை பின்னோக்கி தள்ளிவிட்டு பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது தமிழகத்தில் திமுக வெர்சஸ் பாஜக என்ற நிலையை ஏற்படுத்தவே திமுகவை பாஜக கடுமையாக விமர்சித்து வருவதாக சொல்கிறார்கள்.

சொத்து வரி

சொத்து வரி

பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. முதல்வர் ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்களையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்தார். திமுக எம்எல்ஏ வீட்டு மொய் விருந்தில் ரூ 10 கோடி வசூலானதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

 திமுக ஆட்சி

திமுக ஆட்சி

ஆற்று மணல் கொள்ளை விவகாரத்தில் திமுக ஆட்சியில் இயற்கை அன்னையை துண்டு துண்டாக வெட்டி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் 10 லோடு மணலை அள்ள உரிமம் பெற்றுவிட்டு ஆயிரக்கணக்கான லோடு மணலை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

கோவை கார் வெடிப்பு

கோவை கார் வெடிப்பு

அது போல் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் போதும் தமிழக அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். மேலும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்னமும் குண்டு வெடிப்பு என சொல்லாமல் கார் சிலிண்டர் வெடிப்பு என தமிழக அரசு கூறிவருவது ஏன் என அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.

யாருடன் விவாதிப்பது?

யாருடன் விவாதிப்பது?

தற்போது முதல்வராக ஸ்டாலின் இருந்தாலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் உதயநிதி ஸ்டாலினுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதாக விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது அமைச்சராகிவிட்டதால் முக்கிய முடிவுகள் குறித்து முதல்வருடன் விவாதிப்பதா இல்லை அமைச்சர் உதயநிதியுடன் விவாதிப்பதா என்ற குழப்பமும் ஏற்படும் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+