ஸ்டாலின் சப்போர்டுக்கு வந்த துரை வைகோ! அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று ஆவேசம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைதான் அரசியல் செய்கிறார் என்று துரை வைகோ என்று விமர்சித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
விழா மேடையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் 5 கோரிக்கைகள் முன் வைத்து பேசினார். மத்திய- மாநில அரசுகள் உறவு, கூட்டாட்சி தத்துவம், திராவிட மாடல் என்றால் என்ன? என்பது குறித்து விரிவாக பேசினார். மேலும் மத்திய அரசு என குறிப்பிடாமல் பலமுறை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்டவேண்டிய நேரமிது. தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம் எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

அண்ணாமலை கண்டனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசிய அனைத்துமே பொய். அனைத்துமே முன்னுக்குப் பின் முரணானவை என்று சொன்னார் அண்ணாமலை. முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் தமிழக அரசியலில் கரும்புள்ளி. முதல்வர் ஸ்டாலின் பேசிய ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் பாஜக பதில் தரும் என்று கூறியிருக்கிறார்.

அண்ணாமலை அரசியல் செய்கிறார்
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, " நேற்று முதல்வர் அரசியல் பேசவில்லை தமிழர்களுக்கு தேவையான கோரிக்கையை பேசி இருக்கிறார்; தமிழ்நாடு பாஜக தலைவர் தான் அரசியல் செய்கிறார் என்று கூறியுள்ளார்.

துரை வைகோ
கடந்த முறை நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் இருந்ததது. அதனால்தான் பிரதமர் வரும்போது கருப்பு பலூன் பறக்க விட்டோம். இம்முறை தமிழ்நாட்டிற்கான திட்டங்களை தொடங்கி வைக்க வந்ததால் பிரதமரை வரவேற்கிறோம் என்றும் துரை வைகோ கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications