சிக்கன் ரைஸ் விவகாரம்- அமித்ஷா பி.ஏ.வுக்கு போன் போடவா? சென்னையை அலறவிட்ட பாஜக பிரமுகர்- வைரல் வீடியோ
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் சிக்கன் ரைஸ் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பி.ஏ.வையும் கோர்த்துவிட்டு சென்னை பாஜக பிரமுகர் செய்த அலப்பறை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் பாஜகவை சேர்ந்தவராக தன்னை கூறிக் கொள்ளும் புருஷோத்தமன் என்ற நபர் குடிபோதையில் ஹோட்டல் ஒன்றில் தகராறு செய்திருக்கிறார். சிக்கன் ரைஸ் விவகாரத்தில் இந்த தகராறு ஏற்பட்டிருக்கிறது.

அப்போது போலீசார் வந்து பாஜகவை சேர்ந்தவர் என கூறும் புருஷோத்தமனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அகற்ற முயற்சித்தனர். ஆனால் தாம் பெரிய ரவுடி இல்லை.. இந்த திருவல்லிக்கேணி பகுதி பாஜகவின் பகுதி செயலாளர்.
நாளைக்கு இந்த ஹோட்டல் நடக்குமா? மத கலவரம்.. மத கலவரம் வரும். அவன் இந்து முன்னணி ஆள்.. அவனை கண்ட்ரோல் பண்ணி வெச்சிருக்கேன்..
நான் பிஜேபி ஆள்னா.. அவன் இந்து முன்னணி ஆள்.. அவன் இந்து முன்னணி ஆள்.. இல்லை மாமா.. பிஜேபி ஆள்னா ஒரு மரியாதை இல்லையா?
மத கலவரம் ஆகிடும்.. அமித்ஷா பிஏவுக்கு போன் அடிச்சுடுவேன்.. 1,000 பேர் ரெடியாக இருக்கிறாங்க.. என்று போதையில் சகட்டுமேனிக்கு மிரட்டுகிறார் புருஷோத்தமன் என்ற நபர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.