சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்ல நோட்டாவை முந்துங்க பார்ப்போம்.. பாஜகவை விரட்டும் திமுக!

Google Oneindia Tamil News

சென்னை : தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்புடன் காணப்படுகிறது. அதிலும் தீவிர பிரசாரம் துவங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசியலை பாஜக குறிவைத்துள்ளது திமுக.,க்கு கவலை அளிக்கிறதா. தொடர்ந்து 3 வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக.,விற்கு வாய்ப்பு கிடைக்குமா.

திமுக ஆட்சி அமைக்க எத்தகைய வாய்ப்புக்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு திமுக செய்தி தொடர்பாளர் மனு சண்முகசுந்தரம், டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அதன் விபரம்...

 திமுக.,வுக்கு முக்கியமான தேர்தல்

திமுக.,வுக்கு முக்கியமான தேர்தல்

கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் என்பதால் இது திமுக.,வை பொறுத்த வரை மிக முக்கியமானது. 1957 ல் தமிழகத்தில் நடந்த தேர்தலில் முதல் முறையாக திமுக போட்டியிட்டது. இதில் கருணாநிதி போட்டியிடவில்லை. அதற்கு பிறகு 13 தேர்தல்களில் அவர் போட்டியிட்டுள்ளார். அதில் ஒன்றில் கூட அவர் தோற்றது இல்லை. அதற்கு பிறகு இப்போது தான் கருணாநிதி பங்கேற்காத தேர்தல் நடக்க உள்ளது. அதே சமயம் கருணாநிதி இல்லாமல் 20219 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட திமுக, 39 இடங்களை கைப்பற்றியது.

 காங்கிரசிற்கு சீட்கள் குறைக்கப்பட்டது காரணம்

காங்கிரசிற்கு சீட்கள் குறைக்கப்பட்டது காரணம்

இதற்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் இல்லை. திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கொள்கையால் இணைந்துள்ள கட்சிகள். தேர்தல் இல்லாத சமயங்களிலும் இணைந்து செய்யபடுகின்றன. மத்தியிலும் இணைந்து செயல்படுகின்றன. இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அனைவரின் கோரிக்கையையும் நிறைவேற்ற தான் சீட் குறைக்கப்பட்டது.

 திமுக கையில் எடுக்கும் பிரச்னைகள்

திமுக கையில் எடுக்கும் பிரச்னைகள்

பிரசாரத்தில் திமுக கையில் எடுக்கும் முதல் பிரச்னை ஊழல். வர்த்தகர்களுக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு. மத்திய அரசிடம் அதிமுக அரசு அடிபணிந்து செல்வது ஆகியவற்றை மையமாக வைத்து பிரசாரம் செய்ய உள்ளோம். மேலும் சமீபத்தில் திமுக தலைவர் வெளியிட்ட 10 ஆண்டு திட்டங்கள், விவசாயம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்கான திட்டங்கள் ஆகியன முக்கி அம்சங்களாக இடம்பெறும்.

 நோட்டாவை ஜெயிக்கட்டும் முதலில்

நோட்டாவை ஜெயிக்கட்டும் முதலில்

கர்நாடகா, புதுச்சேரியில் பாஜக என்ன செய்தது என அனைவருக்கும் தெரியும். அதே போல் தமிழக அரசியலிலும் ஆர்வம் காட்டுகிறது. ஆனால் கடந்த 5 - 6 தேர்தல்களில் தமிழகத்தில் பா.ஜ., பெற்ற ஓட்டு சதவீதம் 2.5 சதவீதம் தான். அதாவது நோட்டோ பெற்ற ஓட்டுக்கள் தான். முதலில் நோட்டாவை விட அதிக ஓட்டுக்கள் பெறட்டும், பிறகு 10 சதவீதம் ஓட்டுக்களை பெறட்டும். 2019 ல் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கூறிய நிலையிலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவர்களால் டெப்பாசிட் கூட வாங்க முடியவில்லை.

 சசிகலாவின் தாக்கம் இருக்குமா

சசிகலாவின் தாக்கம் இருக்குமா

அரசியலை பொறுத்தவரை அவர் ஒன்றுமே இல்லை. கடந்த 4-5 ஆண்டுகளில் அவர் ஆட்சியிலோ அல்லது எந்த பொறுப்பிலோ இல்லை. திமுக.,வோ மற்ற கட்சிகளோ சசிகலாவை ஒரு அரசியல் போட்டியாக யாரும் கருதவில்லை. ஆனால் அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தது அதிமுக.,விற்கு சாதகமாக அமையும்.

 அதிமுக.,வில் இல்லையா வாரிசு அரசியல்

அதிமுக.,வில் இல்லையா வாரிசு அரசியல்

1976 ல் மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதன் மூலம் அரசியலும் வந்தவர். 1989 ல் தான் ஸ்டாலின் முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்டு, எம்எல்கஏ ஆனால். ஆனால் 2006 ல் 3 வது முறையாக எம்எல்ஏ ஆன போது தான் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட உதயநிதி சீட் கேட்கவில்லை. இளைஞரணி தலைவர் என்ற முறையிலேயே அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஏன் அதிமுக.,வில் கூட எம்ஜிஆர் மறைந்த பிறகு அவரது மனைவி ஜானகி சில காலம் முதல்வராக இருந்தார். அதன் பிறகு ஜெயலலிதா வந்தார். அவர் மறைந்த பிறகு அவரின் நெருங்கிய தோழி சசிகலா வந்துள்ளார். இது வாரிசு அரசியல் இல்லையா.

 எடப்பாடியார் எப்படி முதல்வரானார்

எடப்பாடியார் எப்படி முதல்வரானார்

எடப்பாடி பழனிசாமி வாரிசு அரசியல் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் எவ்வாறு முதல்வர் ஆனார் அனைவருக்கும் தெரியும். சசிகலாவின் காலில் விழுந்து, முதல்வர் பதவியை பெற்றார். துணை முதல்வராக இருக்கும் ஓபிஎஸ் மகன் இப்போது தேனி தொகுதி எம்.பி.,யாக இருக்கிறார். அவரது மற்றொரு மகனான ஜெயபிரதீப், இந்த தேர்தலில் சீட் கேட்டு விருப்ப மனு அளித்திருந்தார். அதனால் திமுக.,வில் மட்டும் தான் வாரிசு அரசியல் உண்டு என்ற வாதத்தை ஏற்க முடியாது.

English summary
BJP is like NOTA in state politics says DMK spokesperson
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X