சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லிக்கு பறந்த "ரிப்போர்ட்".. "அவர்" மீது வருத்தமா?.. என்ன நடக்கிறது பாஜகவில்..?

தமிழக பாஜகவில் உட்பூசல் கிளம்பி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை, டெல்லி மேலிடம் அதிருப்தி காரணமாக கடிந்து கொண்டதாம்.. இப்படி ஒரு தகவல் அரசியல் களத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது..!

"இந்த முறை எங்களுக்கு 60 சீட்டுக்கள் தந்தாக வேண்டும், தனியாக களம் காணும் அளவுக்கு பாஜக வலுவான கட்சி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறப்பது நிச்சயம்" என்று எத்தனையோ கருத்துக்களை சொல்லி வந்தார் எல்.முருகன்.

இறுதியில் 6 மாத காலத்துக்கு பிறகு, அக்கட்சிக்கு 20 சீட் ஒதுக்கப்பட்டது.. இந்த 20 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இவர்களுக்கு பிரச்சாரம் செய்ய ராதாரவி, நமீதா முதல் வடமாநில தலைவர்கள் வரை வந்து போனார்கள்.

"டிக்" அடித்த ஸ்டாலின்.. யார் அந்த 2 பேர்.. இவர்கள்தான் "அட்வைஸர்களா?".. எகிறும் எதிர்பார்ப்பு

 வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

இந்த சூழலில் பல கருத்து கணிப்புகளும் வெளியாகிய வண்ணம் இருந்தன.. அதில், 20 தொகுதிகளில் ஒன்றில்கூட பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், வேண்டுமானால் 2, 3 தொகுதிகளில் டஃப் தரலாம் என்றும் சொல்லப்பட்டது.. தற்போது தேர்தலும் முடிந்த நிலையில், இந்த 20 தொகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பூத் கமிட்டி சரியாக அமைக்கப்படவில்லை என்று ஒரு புகார் எழுந்துள்ளது.

தலைமை

தலைமை

அதாவது, திருவையாறு, திருவண்ணாமலை, திருக்கோவிலுர் ஊட்டி, மதுரை வடக்கு, திட்டக்குடி, போன்ற பூத் கமிடடி சரியாக அமைக்கவில்லையாம். இதைதவிர, ஒருசிலருக்கு சீட் தந்ததில் பாஜக தலைமைக்கு திருப்தி இல்லையாம்.. குறிப்பாக, சிவதலம் அமைந்துள்ள அந்த மாவட்டத்தின் பாஜக பிரமுகர் மீது குற்றப்பின்னணி இருந்தும் ஏன் சீட் தரப்பட்டது? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால், பாஜக தலைமை, தமிழக மாநில தலைவரை கடிந்து கொண்டதாகவும், அநேகமாக ரிசல்ட்டுக்கு பிறகு இதுகுறித்த நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் தகவல்கள் பரபரத்தன.

 பிரச்சாரங்கள்

பிரச்சாரங்கள்

இதையடுத்து, இந்த தகவல் உண்மைதானா? என்று ஒரு சிலரிடம் நாம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: "இந்த முறை பாஜகவின் பிரச்சாரங்கள் மக்களின் நேரடி அதிருப்தியை சில இடங்களில் பெற்றன.. வன்முறையும் ஓரிரு இடங்களில் நிகழ்ந்தது.. ஆபாச பேச்சுக்களை ஒருசில நட்சத்திர பேச்சாளர்கள் தெறிக்க விட்டனர்.. அதேபோல, சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை என்றும், பூத் கமிட்டிக்கு ஆள் கிடைக்காமல் பெங்களூரில் இருந்து ஆட்களை இறக்கியதாக கூட தகவல்கள் எல்லாம் வந்தன..

பொறுப்பு

பொறுப்பு

ஆனால், மேலிடம் கடிந்து கொள்ளும் அளவுக்கு முருகனின் செயல்பாடு இல்லை.. சொல்லப்போனால், முருகனை மாநில பொறுப்பில் நியமித்த பிறகுதான், கட்சிக்குள் பல அதிரடிகள் ஆரம்பமானது.. பல விஐபிக்கள் இணைந்தனர்.. நமக்கு தேர்தல் முடிந்த நிலையில், திருப்பதி இடைதேர்தல் பிரச்சாரத்துக்கு முருகனை அனுப்பி வைத்ததே டெல்லி மேலிடம்தான்..

முருகன்

முருகன்

அந்த அளவுக்கு நம்பிக்கையை முருகன் பெற்றுள்ள நிலையில், இதெல்லாம் கட்டுக்கதை. அதேசமயம் தொகுதிக்குள் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று பாஜக தரப்பிலேயே சில தொகுதிகளில் புலம்பல்கள் எழ ஆரம்பித்துள்ளன.. இப்படித்தான் அன்றைய எம்பி தேர்தலின்போதும் நடந்தது.. எனவே, ஒத்துழைப்பு கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் இருந்து 20 தொகுதிகளுக்கும் கிடைத்ததா என்பதுதான் விஷயமே" என்றனர்.

English summary
BJP L Murugan and Local Politics in TN BJP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X