"முன்னோர்.." பிடிஆர் பட்ஜெட்டை கிண்டல் செய்த வானதி சீனிவாசன்.. வந்து குவியும் கமெண்ட்கள்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கிண்டலாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் நெட்டிசன்கள் அவரிடம் பதில் கேள்வி கேட்டு கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.
Recommended Video
தமிழக அரசின் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைப்பது, அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பது போன்ற பல்வேறு திட்டங்களை நிதி அமைச்சர் அறிவித்தார்.

நெகிழ்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
அதே நேரம் தனது உரையின் ஆரம்பத்திலும் பிறகு உரையை நிறைவு செய்த போதிலும் தனது குடும்ப பாரம்பரியத்தை அவர் நினைவுகூர்ந்தார். உரையை நிறைவு செய்யும் போது தனது பாட்டனார், தந்தை ஆகியோரை நினைவுகூர்ந்தார். அறிஞர் அண்ணா ,கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் திமுக சார்பாக நிதி துறை அமைச்சர்களாக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்த அவையில் தனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து பெருமிதம் கொள்வதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் . அப்போது அவரது குரல் தழுதழுத்தது.

வானதி சீனிவாசன் கேலி
இப்படியாக ஒரு பக்கம் திட்டங்கள்.. இன்னொரு பக்கம் நெகிழ்ச்சி என்று இந்த பட்ஜெட் உரை நிறைவடைந்தது. இந்த நிலையில்தான் பாஜக எம்எல்ஏ மற்றும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர், வானதி சீனிவாசன் ட்விட்டரில் இது பற்றி கேலியாகப் பதிவு செய்துள்ளார். 'முன்னோர்' மரியாதையுடன் துவங்கிய பட்ஜெட், முந்தைய ஆட்சியின் தவறுகளால் என ' வெள்ளை அறிக்கை ' அடித்தளமிட்டு, மத்திய அரசின் மீது பழி போட்டு விட்டு, இப்போதுதான் ' புரிந்தது' என தன்நிலை சுட்டி, குடும்ப பாரம்பரியத்துடன் நிறைவடைந்தது. இவ்வாறு வானதி ட்வீட் செய்துள்ளார்.

வெள்ளையறிக்கை
இரு தினங்களுக்கு முன்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக நிதிநிலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் 2 லட்சத்து 60 ஆயிரம் கடன்சுமை இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார் . இந்த நிலையில்தான் அந்த வெள்ளை அறிக்கையையும் இப்போது அவர் நெகிழ்ச்சியாக பேசியதையும் எல்லாம் தொடர்புபடுத்தி பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல் விலையை எப்போ குறைப்பீங்க
இருப்பினும் இந்த பட்ஜெட்டில் என்ன நிறை, என்ன குறை என்பதை பற்றி நேரடியாக வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவிக்கவில்லை. ஆனால் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய அரசு அதிகப்படியாக வரி வருவாய் பெறுகிறது. அதாவது சுமார் 31 ரூபாய் அளவுக்கு வரி வருவாயை மத்திய அரசு ஈட்டுகிறது. மாநில அரசு மிகக் குறைவாகத்தான் அதில் பங்கு பெறுகிறது. அப்படியிருந்தும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து உள்ளார் தமிழக நிதியமைச்சர். மத்திய அரசு எப்போது விலையை குறைக்கும் என்று வரிசையாக பின்னூட்டங்கள் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுவரை வானதி இதற்கு பதில் சொல்லவில்லை.












Click it and Unblock the Notifications