Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டமளிப்பு விழாவில் முருகன் இருக்காரே! இப்போ புறக்கணிங்க பார்ப்போம்! பொன்முடியை சீண்டிய நாராயணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை : மதுரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டதால் புறக்கணித்த அமைச்சர் பொன்முடி இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பாரா அல்லது கடந்த கால நிகழ்வுகளுக்கு மன்னிப்பு கேட்பாரா என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதானம் குறித்து பேசியதும், பின்னர் திராவிடம் குறித்து பேசியதும் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக ஆளும் திமுக அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கினையே கடைப்பிடித்து வருகிறார். நாளுக்கு நாள் இருதரப்புக்கும் இடையான மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆரியன் ரவி தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் எல் முருகன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Anna University Convocation | உயர்கல்வியில் Tamilnaduதான் முதலிடம் - Minister Ponmudi பெருமிதம்
    அமைச்சர் பொன்முடி

    அமைச்சர் பொன்முடி

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கடும் சர்ச்சைகள் எழுந்தது. அதாவது பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் என்ற அடிப்படையில் தங்களுக்கு எந்த தகவலும் தரவில்லை எனவும், மத்திய அமைச்சரின் பெயருக்கு அடுத்து தனது பெயர் இருப்பதாகவும் இதன் காரணமாக நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.

    நாராயணன் திருப்பதி

    நாராயணன் திருப்பதி

    இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக விழாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது போல அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் புறக்கணிப்பாரா என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    மன்னிப்பு கேட்பாரா?

    மன்னிப்பு கேட்பாரா?

    அதில்,"காமராஜர் பல்கலைக்கழகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழாவை மத்திய அமைச்சர்எல்.முருகன் கலந்து கொண்டதால் புறக்கணித்த தமிழக அமைச்சர் பொன்முடி அவர்கள், இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் எல்.முருகன் அவர்கள் கலந்து கொள்ளும் விழாவினை புறக்கணிப்பாரா? அப்படி புறக்கணிக்கவில்லையெனில் அன்று செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்பாரா?: என கேள்வி எழுப்பியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+