சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரபு நாடுகள் தலையிடக்கூடாது.. மோடிஜி ஆட்சிலதான் முஸ்லிம்கள் பாதுகாப்பா இருக்காங்க! -வேலூர் இப்ராஹிம்

Google Oneindia Tamil News

சென்னை: தேசத்தின் உள்விவகாரங்களில் அரபு நாடுகள் தலையிடும் என்றால் அதை ஒருபோதும் பாரத மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்து உள்ளார்.

சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போ வெங்கையா நாயுடு இல்லையா.. மூணு லட்டு தின்ன ஆசை.. குடியரசு தலைவர் தேர்தலை வைத்து பாஜக ஸ்கெட்ச் அப்போ வெங்கையா நாயுடு இல்லையா.. மூணு லட்டு தின்ன ஆசை.. குடியரசு தலைவர் தேர்தலை வைத்து பாஜக ஸ்கெட்ச்

அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மகாராஷ்டிராவில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதுகுறித்து மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, "நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப உள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தை பதிவு செய்வோம்." என்றார்.

கான்பூர் கலவரம்

கான்பூர் கலவரம்

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

வளைகுடாவில் எதிர்ப்பு

வளைகுடாவில் எதிர்ப்பு


இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

கட்சியிலிருந்து நீக்கம்

கட்சியிலிருந்து நீக்கம்


இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

வேலூர் இப்ராஹிம் கருத்து

வேலூர் இப்ராஹிம் கருத்து

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளதாவது, "மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அவ்வப்போது சில குறைமதியாளர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிப்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம், அதை ஜனநாயக ரீதியில் நாம் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

Recommended Video

    Nupur Sharma Comment On Muhammad | முகமது நபிகள் பற்றி நுபுர் சர்மா.. என்ன நடக்கிறது? | *Politics
    அரபு நாடுகளுக்கு கண்டனம்

    அரபு நாடுகளுக்கு கண்டனம்

    இதை வாய்ப்பாக பயன்படுத்தி என் தேசத்தின் உள்விவகாரங்களில் அரபு நாடுகள் தலையிடும் என்றால் அதை ஒருபோதும் பாரத மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மோடிஜி அவர்களின் ஆட்சியில் உலகின் மற்ற நாடுகளை விட பாரதத்தில் இஸ்லாமியர்கள் பாதுகாப்புடனும் அனைத்து உரிமைகளையும் பெற்று சிறப்பாக இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு அறிவிப்போம். ஜெய்ஹிந்த்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    BJP National secretary Vellore Ibrahim condemn Arab countries on Prophet Muhammad row:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X