கூட்டணியை தேசிய தலைமைதான் முடிவு செய்யுமா? இபிஎஸ் பேச்சுக்கு பதில் சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை: பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அதே நேரத்தில் பாஜக பார்லிமெண்ட் போர்டில் இருக்கும் தலைவர்கள் எடுக்கும் முடிவு இந்தக் கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை கூறினார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "பாஜக தேசிய கட்சி, அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை அந்த கட்சியின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக டெல்லியில் உள்ள தலைவர்களே கூறியுள்ளனர்" என்றார்.
தமிழகத்தில் அதிமுக உடனான கூட்டணியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை என்று பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு அண்ணாமலைக்கு பதில் கொடுக்கும் விதமாகவே இருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறினர்.

அண்ணாமலை பதில்
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவை பொறுத்தவரை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்கிறது. ஆட்சிமன்றக் குழுவில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு மதிப்பு கொடுத்து கேட்டுவிட்டு முடிவு செய்வார்கள்" என்று சூடாக பதில் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அண்ணமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இது தான் அரசியல் அமைப்பு சட்டம்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவை மீண்டும் சட்ட சபையில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். இனி ஆளுநர் திரும்பி அனுப்ப வாய்ப்பு இல்லை. கையெழுத்து போடத்தான் போகிறார். ஏனெனில் அதுதான் அரசியல் அமைப்பு சட்டம். ஆனால் ஒரே பயம் ஒரு முறையற்ற மசோதா பாலிட்டி மசோதா மீண்டும் கோர்ட்டிற்கு போய் தடையாகி மறுபடும் பிரச்சினை ஆகத்தான் போகிறது. ஆளுநரை பொறுத்தவரை கையெழுத்து போட வேண்டிய நிர்பந்தம் மட்டும் இல்லை. கட்டாயமும் இருக்கிறது அதுதான் அரசியல் அமைப்பு சட்டம்.

இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள். இது குறித்து நிறைய பேசிவிட்டோம். இன்னும் 9 மாதங்கள் இருக்கிறது. நேரமும் காலமும் வரும் போது பேசுவோம்" என்றார். அப்போது அதிமுக - பாஜக கூட்டணியை முடிவு செய்ய வேண்டியது டெல்லி தலைமைதான் என்று இபிஎஸ் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆட்சி மன்றக்குழுதான் முடிவு
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "டெல்லி தலைமையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் பாஜக என்பது தொண்டர்களின் கட்சி. மற்ற கட்சி போல ஒரு தலைவர் வந்து 50 வருஷம் 60 வருஷம், 70 வருஷம் என்று இருப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. பாஜகவை பொறுத்தவரை ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்கிறது. ஆட்சிமன்றக் குழுவில் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொண்டர்களுக்கு மதிப்பு கொடுத்து கேட்டுவிட்டு முடிவு செய்வார்கள்.

பாஜக வலிமை பெற வேண்டும்
இந்தக் கட்சியில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். அதே நேரத்தில் பாஜக பார்லிமெண்ட் போர்டில் இருக்கும் தலைவர்கள் எடுக்கும் முடிவு இந்தக் கட்சியை வலுப்படுத்தக் கூடியதாகத்தான் இருக்கும். என்னை பொறுத்தவரை மாநில தலைவர் என்ற முறையில் எதுவாக இருந்தாலும் பாஜக வலிமை பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

எந்த முடிவாக இருந்தாலும்
கூட்டணி வேண்டாம், கூட்டணி வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு இல்லை. அதற்கு பார்லிமெண்ட் போர்டு உள்ளது. தலைவர்கள் இருக்கிறார்கள். எந்த முடிவாக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications