10+ "தலைகளை".. அலேக்காக அள்ள பிளான் போடும் கமலாலயம்.. பஞ்சாயத்தை கூட்டிய அதிமுக.. என்ன நடக்குது?
சென்னை: இன்று சென்னையில் நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு முன்பாக தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.

கூட்டம்
கடந்த ஒரு வருடமாக அதிமுக கட்சிக்குள் பெரிய அளவில் செயல்பாடுகள் எதுவும் இல்லை. ஆட்சி பறிபோன பின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தவிர அதிமுக பெரிய அளவில் ஆக்டிவாக இல்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக திமுகவிற்கு எதிராக மிகவும் வலுவாக அதிமுக எதிர்ப்புகளை வைக்கவில்லை என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இடையில் அதிருப்தி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தலைகளுக்கு இடையில் அதிக அதிருப்தி காணப்படுகிறதாம்.

அதிருப்தி
கட்சி இன்னும் தீவிரமாக அரசை எதிர்க்க வேண்டும். பாஜக போராட்டங்களை முன்னெடுப்பது, பேட்டி கொடுப்பது, ஊழல் புகார் வைப்பது போல நாமும் செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்வது இல்லை என்று அதிமுக அடிமட்ட நிர்வாகிகள், உள்ளூர் அளவில் சில மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தோல்வி, தற்போது எதிர்க்கட்சி இடத்திற்கு பாஜக போட்டியிடுவது போன்ற விஷயங்களால் இவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

இரண்டு மாவட்டம்
அதேபோல் கொங்கு மாவட்டத்திற்கு அதிக முக்கியதத்துவம் தரப்படுகிறது, கொங்கு தாண்டி போனால் ஓபிஎஸ்ஸின் தேனிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. மற்றபடி வேறு மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற அதிருப்தியில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை என்ற மனக்கஷ்டம் சில மா. செக்கள் மத்தியில் இருக்கிறதாம்.

பாஜக பிளான்
இந்த மனக்கசப்பை பயன்படுத்தி அதிமுகவின் 10 + தலைவர்களை பாஜக இழுக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது. அதாவது அதிமுகவின் சில மாவட்ட செயலாளர்கள், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது. அதிருப்தியில் இருப்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் திட்டத்தில் கமலாலயம் சில முயற்சிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

பஞ்சாயத்து
இந்த நிலையில்தான் மாவட்ட செயலாளர்களை சமாதானம் செய்யும் விதமாக இன்று கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட உள்ளது என்கிறார்கள். மாவட்ட செயலாளர்களின் குறைகளை இன்று நிர்வாகிகள் கேட்பார்கள். எந்தெந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை விசாரித்து, அதை சரி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று பேசும் விஷயங்களை பின்னர் அதிமுக பொதுக்குழுவில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா
அதேபோல் இன்று மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியமான உத்தரவு ஒன்றும் போடப்பட உள்ளது. அதன்படி ஒற்றை தலைமை பற்றி பேச கூடாது. சசிகலா பற்றி நிர்வாகிகள் யாரும் பேச கூடாது. சசிகாலா பற்றி செய்தியாளர்கள் கேட்டால் அதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு பாஜக கூட்டணி பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று வாய்பூட்டு போடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications