ஸ்டாலினே “அருள் தந்தை”.. ஆலய பாபுவா? “அல்லேலூயா” பாபுவா? சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கேள்வி
சென்னை: சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணின் செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட திமுகவின் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கிறிஸ்துவர்களின் முழக்கமான அல்லேலூயா என்று மூன்று முறை முழக்கமிட்டு உரையை நிறைவு செய்தார். இந்த வீடியோவை பகிர்ந்து உள்ள சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் விமர்சித்து உள்ளார்.
சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் அமைந்து இருக்கும் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா 2022 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் சட்டமன்ற உறுப்பினர், பாதிரியார்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

அமைச்சர் சேகர் பாபு பேச்சு
இதில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்ற முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் யாரும் ஓரம்கட்டப்பட்டவர்கள் இல்லை, எல்லாம் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்ற முன்னோடியான மாநிலமாக திராவிட மாடல் ஆட்சியாக இருக்கிறது.

அருட் தந்தையாக முதலமைச்சர்
எங்கெல்லாம் அபயக் குரல் கேட்கின்றதோ அங்கெல்லாம் ஆதரவு கரம் நீட்டுகின்ற அருட் தந்தையாக நம்முடைய முதலமைச்சர் இருக்கின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நீ ஒரு அடி என்னை நோக்கி நடந்தால் நூறு அடி ஓடோடி வந்து உன்னை ஆரத் தழுவுவேன் என்று சொல்வார்கள். தமிழ்நாடு முதலமைச்சரை நோக்கி யாரெல்லாம் ஓரடி வருகிறார்களோ அவர்களை நோக்கி நூறு அடி பாயக் கூடிய ஆற்றல் வாய்ந்த முதலமைச்சர் இருக்கும்போது ஓரம்கட்டப்படுபவர்கள் இந்த நாட்டில் யாருமே இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன்.

இளைய தலைவர் உதயநிதி
ஒரு சில தலைவர்கள் வெளியிலே வருவார்கள். நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். அந்த நிகழ்வுகளால் தங்களுக்கு என்ன பயன் என்று கூர்ந்து கவனித்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். ஆனால் நம்முடைய இளைய தலைவராக இருக்கும் அருமை அண்ணன் உதயநிதி அவர்கள் வெளியில் வந்தாலே மக்களுக்கு வசந்தம் என்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன.

உதயநிதி வழியில் நிற்போம்
இன்று அவர் ஏற்று இருக்கின்ற துறை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை. அரசியல் என்ற கள விளையாட்டிலே இனி அவர் ஆடுகின்ற ஆட்டங்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிகளை குவிக்கும் என்று தெரிவித்து அவர் வழிநின்று அவர் காட்டுகின்ற காட்டுகின்ற பாதையிலே, தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டு விரல் காட்டும் திசை நோக்கி பாயும் கூட்டம் என்றும் அவர் பின்னால் நிற்கும்.

அல்லேலூயா முழக்கம்
வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! நன்று வணக்கம்." என்று கிறிஸ்தவர் மக்கள் எழுப்பும் முழக்கங்களை எழுப்பிவிட்டு உரையை நிறைவு செய்தார். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அல்லேலூயா என்று முழங்கிய வீடியோவை அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்
அந்த வகையில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அல்லேலூயா என்று முழங்கிய அமைச்சர் சேகர் பாபுவை விமர்சித்து உள்ளார்கள். சென்னை மாநகராட்சியின் ஒரே ஒரு பாஜக கவுன்சிலரான உமா ஆனந்தனும் அந்த வீடியோ ட்விட்டரில் பகிர்ந்து கருத்திட்டு உள்ளார். அதில், "எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் moment. ஆலய பாபுவா அல்லேலூயா பாபு வா" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications