• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"டபுள் மீனிங்".. நம்ம வானதியா இப்படி.. "லிப் சர்வீஸ்".. கமல் இதுக்கு பதில் சொல்வாரா..?

|

சென்னை: "நீங்க இத்தனை நாள் லிப் சர்வீஸ் மட்டும்தான் பண்ணீங்களா? லிப் சர்வீஸ்ன்னா என்ன? அப்படின்னா 2 அர்த்தம் இருக்கு.. ஒன்னு, உதட்டளவில் சேவை செய்யறது, இன்னொன்னு உதட்டுக்கு மட்டுமே சேவை செய்யற நீங்க என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதின்னு சொல்றீங்களா? பதில் சொல்லுங்க" என்று மநீம தலைவர் கமல்ஹாசனை பார்த்து கேள்வி கணைகளை வீசியுள்ளார் வானதி சீனிவாசன்.

  கோவை: லிப் சர்வீஸ் மட்டுமே செய்பவர் கமல்… களத்தில் போட்டு தாக்கும் வானதி சீனிவாசன்!

  இந்த தேர்தலில், விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது கோவை தெற்கு தொகுதி.. தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிராங் வேட்பாளர்களால், கணிப்பில் ரொம்ப குழப்பத்தை தந்து வரும் தொகுதி இது..

  பிரச்சாரத்தின் துவக்கத்தில் இருந்தே அரசியல் களை கட்டி வரும் தொகுதி இது.. இதுவரை வந்த இத்தனை கருத்து கணிப்புகளில், இங்கு யாருக்கு வெற்றி என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியவில்லை.. அந்த அளவுக்கு வானதி & கமல் இரு ஜாம்பவான்கள் டஃப் தந்து வருகிறார்கள்.

   கருத்து மோதல்

  கருத்து மோதல்

  வழக்கம்போல, தொகுதிகளில் இரு எதிரெதிர் கட்சியினர் மோதி கொள்வதும், சாடிக் கொள்வதும், விமர்சித்து கொள்வதும் இயற்கைதான்.. ஆனால், இவர்கள் 2 பேரிடையே 2 நாட்களாக நடந்து வரும் மோதல் வேறு விதமாக தெரிகிறது.. இருவருமே படித்தவர்கள்.. இருவருமே மக்களின் அன்பை நேரடியாகவும், அபரிமிதமாகவும் பெற்றவர்கள்.. துக்கடா அரசியல்வாதி என்று கமல் விமர்சிக்க போய், இதற்கு வானதி கொந்தளித்துவிட்டார்.

  துக்கடா

  துக்கடா

  "என்னை துக்கடா அரசியல்வாதினு மக்கள் நீதி மய்யத்துக்காரங்க சொல்லியிருக்காங்க.. நான் இங்கதாங்க கோவைல ஒரு அரசு பள்ளிக்கூடத்துல படிச்சு, வழக்கறிஞராகி, என் குடும்பத்த விட்டு எத்தனையோ நேரம் இந்த மக்களுக்காக என்னை அர்ப்பணிச்சு உழைச்சிருக்கேன்.. கடந்த 5 வருசமா நான் என்னென்ன பணிகளை செஞ்சிருக்கேனு என் சமூக ஊடகப் பக்கத்த பாருங்க. ஒரு பெண் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசியல்ல உயர்ந்து வரும்போது இப்படித்தான் கேவலப்படுத்துவாங்களா?" என்று வானதி ஒரு வீடியோ போட்டு கேள்வி கேட்டிருந்தார். வானதியின் இந்த பேச்சில் நியாயம் உள்ளது.. வலி உள்ளது.. உண்மையும் உள்ளது.

   லிப் சர்வீஸ்

  லிப் சர்வீஸ்

  ஆனால், நேற்றைய தினம் வானதி பிரச்சாரம் செய்யும்போது, அவரது பேச்சு வேறு மாதிரியாக இருந்தது.. "நான் கேட்கிறேன் அந்த நடிகர்கிட்ட, நீங்க இத்தனை நாள் லிப் சர்வீஸ் மட்டும்தான் பண்ணீங்களா? லிப் சர்வீஸ்ன்னா என்ன? அப்படின்னா 2 அர்த்தத்தில் நீங்க அவருக்கு எடுத்துக்கலாம்.. ஒன்னு, உதட்டளவில் சேவை செய்யறது, இன்னொன்னு உதட்டுக்கு மட்டுமே சேவை செய்யற நீங்க என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதின்னு சொல்றீங்களா? இதுக்கு அவர் பதில் சொல்லியே ஆகணும்.. மக்கள் ஒன்னும் முட்டாள்ங்க இல்லை" என்று மக்கள் முன்னிலையில் பேசியுள்ளார்.

  ஆண்கள்

  ஆண்கள்

  தமிழக அரசியலை பொறுத்தவரை பெரும்பான்மை இடங்களை ஆண்களுக்கே தந்தது போக மீதி உள்ள இடங்களை ஏதோ ஒரு சிலரே தக்க வைத்து கொண்டிருக்கின்றனர்... அதில் மிக முக்கியமானவர் வானதி சீனிவாசன்... தமிழக பாஜக என்றதுமே தவிர்க்க முடியாத பெயராக நம் முன்பு வந்து நிற்பது வானதி சீனிவாசன்தான்.. மாநில துணை தலைவர் முதல் தேசிய பொறுப்பு வரை பதவியை வகித்து வருகிறார்..

   புள்ளி விவரம்

  புள்ளி விவரம்

  தமிழிசையை போலவே மிக தீவிரமான கட்சிப் பணியை ஆற்றி வருபவர்.. சிறந்த அறிவாளி.. எதையும் நாசூக்காகவும், அதேசமயம் புள்ளி விவர தரவுகளுடனும் மிக பொறுமையாக பேசுவது இவரது சுபாவம். தமிழிசை சவுந்தராஜன் இருக்கும்போதும் சரி, இல்லாதபோதும் சரி, பாஜகவின் கொள்கைகளை எல்லா இடங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் பரவ செய்தவர்.. தமிழிசையை போலவே எதிர்க்கட்சிகளின் மீது நாகரீகமான வார்த்தைகளையும், கண்ணியம் மிகுந்த விமர்சனத்தையும் எடுத்துரைப்பவர்...

   டிவி விவாதம்

  டிவி விவாதம்

  டிவி விவாதங்களில் வானதி கலந்து கொண்டபோதெல்லாம் ஒன்றை நாம் கவனிக்கலாம், எந்த அளவுக்கு கோபம் இருந்தாலும், அதை தடித்த வார்த்தைகள் மூலம் காட்டாதவர்.. குரலை வேண்டுமானால் சற்று உயர்த்தி பேசுவாரே தவிர, நாகரீக வார்த்தை சுவர்களை தாண்டி வானதி சென்றதே இல்லை.. ஆனால், இப்போது வானதியின் பேச்சு நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது..!

   
   
   
  English summary
  BJP Vanathi Srinivasans controversy speech about Kamalhasan over Lip Service
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X