39 சீட் பாஜக தான்.. காத்து எங்க பக்கம்.. கிரவுண்ட்ல நிக்கிறது நாங்க.. ஒரேயடியாக வெடி வீசிய அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறுவதை அதிகம் என்கிறார்கள். ஆனால், கள நிலவரம் மாறி வருகிறது. உண்மையில், 39 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றுதான் சொல்ல வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது பாஜக. தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி லெவலில் பொறுப்பாளர்களை நியமித்து வேகம் காட்டி வருகிறது.

இந்த முறை தமிழ்நாட்டில் கணிசமான தொகுதிகளை வென்றெடுக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருக்கிறது. இதற்காக, அதிமுக கூட்டணியில் அதிக சீட்களையும் பெற பாஜக முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி

அதிமுக - பாஜக கூட்டணி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்போதே தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுகளும் பரபரப்பாகக் கிளம்பியுள்ளன. பாஜக அணியில் இணையும் கட்சிகளுடன் இப்போதே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் பேசினார். அவரது கருத்தை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அனைத்து தொகுதிகளிலும் பாஜக

அனைத்து தொகுதிகளிலும் பாஜக

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி , எனவே 2024ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்தில் தவறில்லை என அண்ணாமலை தெரிவித்தார். மேலும், தேசிய ஐனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் கிடையாது எனக் கூறிய அண்ணாமலை, அதிமுக, பாஜக ஒரே கூட்டணியில்தான் இருக்கிறது, குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து இல்லாமல் பாஜகவினர் அனைத்து தொகுதியிலும் வேலை செய்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

39 சீட்

39 சீட்

கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 25 எம்.பிக்கள் வருவார்கள் என்று சொல்கிறீர்களே? இது கொஞ்சம் அதிகமா தெரியவில்லையா என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன். நான் 39 எம்.பிக்கள் என்று தான் சொல்வேன். ஆனால் அதைக் கேட்க நீங்கள் இன்னும் தயாராக இல்லை. அவ்ளோதான். கிரவுண்ட்ல இருக்கோம். காத்து எந்த பக்கம் அடிக்குது.. மக்கள் எந்தப் பக்கம் சிந்திக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கிரவுண்ட்ல நின்னாதான் தெரியும்

கிரவுண்ட்ல நின்னாதான் தெரியும்

கிரவுண்ட்ல நின்னாதான் தெரியும். நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டு உபி தேர்தலில் பாஜக ஜெயிக்காது என எப்படி கணிக்க முடியும்? உத்தர பிரதேசத்தில் அப்படியே மாறப் போகிறது என்றார்கள். நிறைய முறை எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் எல்லாம் ஏசி ரூமில் உட்கார்ந்து எதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? நாம் கிரவுண்டில் வேறு ஒன்றைப் பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

 கெஜ்ரிவாலுக்கு பில்டப்

கெஜ்ரிவாலுக்கு பில்டப்

மேலும் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பயங்கர பில்டப் குஜராத்தில் அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால்தான் என்று எழுதுகிறார்கள். டிவிகளில் பேசுகிறார்கள். இதுவரைக்கும் பாஜக அதிகபட்சமாக குஜராத்தில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதோ அதை விட 10 சீட் அதிகமாக பாஜக ஜெயிக்கும். ரெக்கார்டை பாஜக முறியடிக்கும், அங்கு 2ஆம் இடத்துக்கு தான் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது எனப் பேசினார்.

ஸ்டூடியோவில் உட்கார்ந்துகொண்டு

ஸ்டூடியோவில் உட்கார்ந்துகொண்டு

இமாச்சல பிரதேசத்தில் எந்த ஒரு அரசுமே திரும்ப ஆட்சிக்கு வராது என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த முறை பாஜக அங்கே மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது. நியூயார்க் டைம்ஸ் இதழில் வேற ஏதோ எழுதுகிறார்கள். அதேபோல தான் வாஷிங்டன் போஸ்ட், நியூஸ் வீக் என வேறு வேறு எழுதுகிறார்கள். இங்கே டிவி ஸ்டூடியோவில் உட்கார்ந்து வேறு ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

 மைனாரிட்டிக்கு எதிரான கட்சியா?

மைனாரிட்டிக்கு எதிரான கட்சியா?

பாஜக மைனாரிட்டிக்கு எதிரான கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் மணிப்பூரில் கிறிஸ்துவர்களாதான் அதிகம். அங்கு 52 சதவிகிதம் கிறிஸ்தவர்கள் தான் இருக்கிறார்கள். 2013ல் அங்கு பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 0.5%. 9 ஆண்டுகளில் பாஜகவுக்கு அங்கு 52% வாக்கு கிடைத்துள்ளது. மைனாரிட்டி சகோதரர்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோவாவிலும் அப்படித்தான். கோவாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது எனப் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+