அட மிருகமே.. சொந்த அக்கானு கூட பார்க்கலையே! அத்துமீறி சிக்கிய தம்பியால் ஷாக்! அதுவும் 20 வருடமாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் கணவரைப் பிரிந்து தன் வீட்டில் வசித்து வந்த தன்னை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் உடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த பிரிவிற்கென மட்டும் சென்னையில் 36 காவல் நிலையங்கள் இருந்த நிலையில், தற்போது அவற்றில் தலா மூன்று ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளன.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

ஆனாலும் குற்ற சம்பவங்கள் குறையாத நிலையில், ஆறுதல் அளிக்கும் விதமாக பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தைரியமுடன் வந்து காவல்நிலையங்களில் புகாராக அளிக்கின்றனர். இதன் காரணமாக நீண்ட கால பாலியல் குற்றவாளிகள் தண்டனை பெறுவதோடு, பலரும் இனி நிம்மதியான வாழ்க்கையை தொடர வாய்ப்புள்ளது. அந்த வகையில் தான் சென்னையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

சகோதரிக்கு கொடூரம்

சகோதரிக்கு கொடூரம்

சகோதரி என்றும் பாராமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது வீட்டில் வசித்து வந்த சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணே தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த பின்னணி குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 48 வயதான பெண் ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணம் ஆகி 5 ஆண்டுகள் வரை கணவனுடன் மகிழ்ச்சியாக வசித்து வந்த நிலையில் குடிபோதைக்கு அடிமையானதால் கணவனை பிரிந்த அந்த பெண் தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

 15 ஆண்டுகள் கொடுமை

15 ஆண்டுகள் கொடுமை

தந்தை இறந்த நிலையில் தனது சகோதரர் மற்றும் தாய் துணையுடன் கடந்த 20 ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அவருடைய இளைய சகோதரன் திருமணம் செய்து கொள்ளாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்திருக்கிறார். நீண்ட காலமாக திருமணம் நடக்காத விரக்தியில் அந்த இளம் பெண்ணின் சகோதரர் குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கம். ஒரு கட்டத்தில் தனது சொந்த சகோதரி என்று கூட பார்க்காமல் அந்த இளைஞர் தனது சகோதரிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலியல் தொந்தரவு அதிகரித்து பாலியல் பலாத்காரமும் செய்து இருக்கிறார்.

 அதிரடி கைது

அதிரடி கைது

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால் வேறு வழியின்றி சகோதரனின் அத்துமீறலை பொறுத்து வந்திருக்கிறார் அந்த பெண். இந்த நிலையில், ஒரு கட்டத்தில் சகோதரனின் கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகமான நிலையில் இனியும் பொறுக்க முடியாது என வெகுண்டு எழுந்த அந்த பெண் இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது இளம் பெண்ணை அவரது சொந்த சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்தது உண்மைதான் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் சகோதரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+