பட்ஜெட்: வருகிறது காவிரி - பெண்ணாறு இணைப்புத் திட்டம்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சென்னை: காவிரி - பெண்ணாறு இணைப்புத் திட்டம் மற்றும் கோதாவரி- கிருஷ்ணா நதிகள் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது மத்திய பட்ஜெட் ஆகும் இது. இரண்டாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வேளாண் மற்றும் சாலை போக்குவரத்து தொடர்பான அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

சாலைகள்
இந்த நிலையில் பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் உட்கட்டமைப்புகளை உலகத் தரத்தில் மேம்படுத்துவதில் அரசு உறுதியுடன் உள்ளது. 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம். சாலை, ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் ஒருங்கிணைக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.

வேளாண் அறிவிப்பு
பார்வத்மாலா' திட்டத்தின்கீழ் மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை. சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். நாட்டில் ரசாயனம் அற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். முதல் கட்டமாக கங்கை நதி அருகே 5 கிமீ காரிடார் உருவாக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

நதி நீர் இணைப்பு
வேளாண் நிலங்களை அளக்க, பயிர் சேதங்களை ஆராய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும். கங்கை- கோதாவரி, பெண்ணாறு-காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்புத் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்புத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். இதனால் வேளாண் துறை முன்னேற்றம் அடையும். விவசாயிகள் பலன் அடைவார்கள்.

பெண்ணாறு-காவிரி
ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்புத் திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 3.8 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும். சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கான அவசரகால கடன் உதவி உத்தரவாத திட்டம் 2023 மார்ச் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications